விடுதலைப் புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழித்தவர்... ராஜபக்சேவை புகழ்ந்து தள்ளிய சு.சாமி!

By sathish k  |  First Published Aug 23, 2018, 11:14 AM IST

விடுதலைப் புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவது என்ற உறுதியான முடிவை எடுத்தவர் என்ற வகையில் அவர் பாராட்டுக்குரியவர்.


இலங்கை சென்றுள்ள பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி மடமுலனாவில் உள்ள ராஜபக்சேவின் முன்னோர்கள் இல்லத்துக்கு சென்று அங்கு ராஜபக்சேவை சந்தித்தும் பேசினார். 

அப்போது டெல்லிக்கு வருமாறு சுப்பிரமணியசாமி அவருக்கு அழைப்பும் விடுத்தார். மேலும், மரணம் அடைந்த ராஜபக்சேவின் இளைய சகோதர சந்திர ராஜபக்சேவின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். 

Latest Videos

இந்த சந்திப்பு குறித்து  சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பதிவில்,  இலங்கையின் தென்பகுதிக்கு சென்று முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து பேசியது மிகவும் மகிழ்ச்சி தரும் நிகழ்வாக இருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை அடியோடு ஒழித்துக் கட்டுவது என்ற உறுதியான முடிவை எடுத்தவர் என்ற வகையில் அவர் பாராட்டுக்குரியவர். அதேபோல் ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் படுகொலை செய்ததால் இந்தியர்கள் கொண்டிருந்த மிகுந்த வேதனையை தணித்தவரும் ஆவார் என  கூறியுள்ளார்.

click me!