பிரசவத்துக்கு தானே சைக்கிள் ஓட்டிச் சென்று மருத்துவமனையில் அட்மிட் ஆன பெண் அமைச்சர் !! குவியும் பாராட்டு !!

By Selvanayagam P  |  First Published Aug 21, 2018, 10:56 AM IST

நியூசிலாந்து நாட்டில் கர்ப்பமாக இருந்த பெண் அமைச்சர் ஒருவர் பிரசவ வலி எடுத்தவுடன் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சைக்கிள் ஓட்டிச் சென்று மருத்துவ மனையில் அட்மிட் ஆன சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அமைச்சருக்கு தற்போது அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.


பொதுவாக கர்ப்பிணிப் பெண்கள் எப்போதும் ஓய்வெடுக்காமல் சிறு,சிறு வேலைகளை செய்து வரவேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வீட்டு வேலைகள் செய்வது,  சைக்கிள் ஓட்டுவது என பல உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்தால், பிரசவம் ஈஸியாக அதாவது சுகப் பிரசவம் ஏற்படும் என மருத்துவர்கள் கர்ப்பிணிப் பெண்களுக்கு அட்வைஸ் செய்கிறார்கள்.

Latest Videos

டாக்டர்களின் இந்த அறிவுரையை இந்தியப்  பெண்கள் பின்பற்றுகிறார்களா என்பது சந்தேகமே. ஆனால் வெளிநாட்டில் உள்ள பெண்கள் இதனை தங்களது கடமையாக செய்து வருகின்றனர். இதற்கு ஒரு உதாரணமாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண் அமைச்சர்  ஒருவரை சொல்லலாம்.

நியூசிலாந்து நாட்டில் இணை போக்குவரத்துத்துறை அமைச்சராக  இருப்பவர்  ஜூலி அன்னே ஜென்டர் . 38 வயதான இவர் தனது முதல் குழந்தையை பெற்றெடுப்பதற்காக, பிரசவகால விடுமுறையில் இருந்துள்ளார்.

ஜுலி  டிரான்ஸ்போர்ட் அமைச்சராக இருந்தாலும், பொது மக்கள் அனைவரும் பெரும்பாலும் சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மற்றவர்களும் அதைப் பின்பற்றும் வகையில் அவர் எங்கு சென்றாலும் சைக்கிளில் தான் செல்வார்.

ஜுலி கர்பமான நாள் முதலே பெரும்பாலும் சைக்கிளைத் தான் உடயோகித்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்ப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் தனது வீட்டில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர்  தூரம் சைக்கிளிலே பயணம் செய்துள்ளார். அப்போது பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்கிறேன் என ஒரு செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பின்னர் மருத்துவமனையில் அட்மிட் ஆன ஜுலி ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார் அதுவும் சுகப் பிரசவம் மூலமாக. இந்நிலையில் ஜுலி ஜென்டரின் மன தைரியத்தை பாராட்டி பல பெண்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

click me!