பருவநிலை மாற்றத்தால் உலக முழுவதும் சுனாமி எச்சரிக்கை.... ஆய்வில் பகீர் தகவல்!

By vinoth kumar  |  First Published Aug 20, 2018, 11:46 AM IST

பருவநிலை மாற்றத்தின் காரணமாக கடல் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் சுனாமி அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில் நுட்ப நிறுவனத்தின் உதவி பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையிலான நிபுணர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.

இந்த மாற்றத்தின் காரணமாக கடல்நீர் மட்டம்  தற்போது சிறிதளவு உயர தொடங்கியுள்ளது. முக்கியமாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர்ந்துள்ளது. கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக சுனாமி ஏற்படும் அபாயமும் உள்ளது.

Latest Videos

தொடக்கத்தில் தென்சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து சுனாமி தொடங்கி தெற்கு தைவான் வழியாக உலகம் முழுவதும் சுனாமி தாக்குதல் அபாயம் உள்ளது என தகவல் தெரிவித்துள்ளது.

click me!