Australia : ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்னில், கடந்த புதன்கிழமை இரவு திடீரென தோன்றிய பிரகாசமான ஒளி மற்றும் அதை தொடர்ந்து கேட்ட மர்மமான உரத்த இடியால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
இரவு சுமார் 9 மணியளவில் தனது காரில் இருந்து இறங்கும் போது, அந்த சத்தம் கேட்ட டோரீனைச் சேர்ந்த ஒரு குடியிருப்பாளரால் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் இந்த விசித்திரமான நிகழ்வு படம்பிடிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இது விண்கல்லில் இருந்து வந்ததாகக் சிலர் கூறும் நிலையில், இந்த ஒலி மற்றும் ஒளியின் தோற்றம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் சமூக ஊடக பயனர்கள் திடீரென ஒளி மற்றும் ஒலியின் வெடிப்புக்கு என்ன காரணம் என்பதை புரிந்துகொள்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Ok, massive explosion wasn’t how I expected tonight to go!
What in the world was that?!
Anyone around know what happened??
undefined
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்ட மெல்போன் நகர வாசி ஒருவர், முதலில் மஞ்சள் நிறத்தில் ஒரு வெளிச்சம் மிகவும் பிரகாசமாக தோன்றியதாகவும், அதனை அடுத்து வெகு சில வினாடிகளில் ஒரு வினோதமான இடி சத்தம் பலத்த முறையில் கேட்டதாக கூறினார். இது என்னவாக இருக்கும் என்று தெரியாமல் குழம்பி நிற்பதாகவும் அவர் கூறினார்.
Another clip pic.twitter.com/bW9h40hVcN
— 𝗥𝗘𝗕𝗭 (@onlyrebz)மேலும் மற்றொரு ட்விட்டர் பயனர் வெளியிட்ட செய்தியில் "ஏதோ ஒரு விண்கல் விழுந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், ஒரு கூடைப்பந்து அளவினான விண்கல் விழும்போது இந்த அளவிற்கு சத்தம் கேட்கும் என்று சில அறிவியலாளர்களும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மெல்பன் நகரில் திடீரென ஏற்பட்ட அந்த அந்த வெளிச்சமும், சத்தமும் எதிலிருந்து உண்டானது என்பது குறித்த அதிகாரப்பூர் தகவல்கள் இன்னும் இல்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D