மக்கள் நிம்மதியாக வாழ விடுதலைப் புலிகள் மீண்டும் வரணும்: இலங்கை அமைச்சர் அதிரடி

 |  First Published Jul 3, 2018, 3:03 PM IST
State Minister Vijayakala Maheswaran wants LTTE back



விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என இலங்கை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியுள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றல் பேசிய இலங்கை பெண்கள் நலத்துறை இணை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், "வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால், எங்களுடைய பிள்ளைகள் நிம்மதியாக வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பவேண்டுமாக இருந்தால் தமிழீழ விடுதலை புலிகளின் கைகள் வடகிழக்கு மாகாணங்களில் ஓங்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழர்களின் நிலங்களை திரும்பக் கொடுத்த இலங்கை அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தலையால் நடந்தே குடியரசுத் தலைவரை நாங்கள் தேர்வு செய்தோம்.ஆனால் குடியரசுத்தலைவர் எங்களுக்கு என்ன செய்தார்?  தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் நாங்கள் எப்படியான வாழ்க்கை வாழ்ந்தோம் என்பது எங்கள் அனைவருக்குமே தெரியும் என விஜயகலா பேசியுள்ளார். 

click me!