
தமிழ் கிராம சேவகரை ஒரு புத்ததுறவி கடும் வார்த்தைகளால் திட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் உள்ள பட்டிகலோ என்ற இடத்தில் அம்பிடிவ் சுமானா என்ற புத்த துறவி ஒருவர் தமிழ் சேவகரை பார்த்து, விடுதலை புலிகள் இயக்கத்தை சேர்ந்த உன்னை பார்க்கும் பொழுது எனது ரத்தம் கொதிக்கிறது. நீ ஒரு தமிழ் நாய் என்றும், நீங்கள் சிங்களர்களுக்கு எதிராக தொடுக்கும் வழக்குகளை நிறுத்த வேண்டும்.
நீங்கள் சிங்களர்களை அவர்களின் இடத்திலிருந்து ஒருவரை அனுப்ப நினைத்தாலும் கூட நான் உங்களை கொன்று விடுவேன் இது உங்கள் அனைவருக்கும் எனது கடைசி எச்சரிக்கை என மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், உன்னை எதுவும் துன்புறுத்தாமல் போவதற்கு ஒரே காரணம் உன்னுடைய இந்த சீருடை தான் என்று கிராம சேவகரை புத்த துறவி காவல் அதிகாரிகள் முன்பே மிரட்டுகிறார்.
அமைதிக்கு பெயர் போன புத்த துறவியே பொதுஇடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.