குண்டுவெடிப்பால் அவசரநிலை... இலங்கையில் இனி நடக்கப்போவது இதுதான்..!

By Thiraviaraj RMFirst Published Apr 22, 2019, 3:11 PM IST
Highlights

தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து அவசர நிலை பிரகடணத்தை அறிவித்தால் அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன. 
 


தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து அவசர நிலை பிரகடணத்தை அறிவித்தால் அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன. 

நேற்று காலை முதல் தேவாலயங்கள், ஹோட்டல்கள் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் எண்ணிக்கை 500 ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் ராணுவம் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுரை 22 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலையை அறிவித்துள்ளார் அதிபர் சிறிசேன. 

அங்கு அவசர நிலை அவசர நிலை அமலுக்கு வந்தால் ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படும். காவல்துறையினருக்கு  அதிகாரங்கள் அதிகரிக்கப்படும். குறிப்பாக தேவைப்படும் ஒருவரை நீதிமன்ற உத்தரவின்றியே கைது செய்து, குறிப்பிட்ட காலம் வரை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் காவல்துறையினர் தடுத்து வைக்கமுடியும்.

தேவைப்படும் இடத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்யவும் காவல்துறையினருக்கு அதிகாரம் இருக்கும். பாதுகாப்பை பலப்படுத்த இராணுவத்தினரும், ஏனைய பாதுகாப்பு படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்படலாம். தேவையான இடங்களில் திடீர் சோதனைச் சாவடிகள்கூட அமைக்கப்படலாம்.

பொது இடங்களில் ஆட்கள் கூடுவது மட்டுப்படுத்தப்படும். இது ஆர்ப்பாட்டங்கள் கலவரங்கள் உருவாவதை தடுக்க உதவும். அனுமதியின்றி கூடும் கூட்டமே கடந்த காலங்களில் பிறரை தாக்கி சொத்துக்களுக்கும் உயிர்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. கலவர நேரங்களில் வன்செயலில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் போலிஸாருக்கு அனுமதி வழங்கப்படலாம். தேவையான இடங்களில் ஊடரங்கு சட்டங்களை பிறப்பிக்க முடியும். நிலைமையை முடிவு செய்ய தேவையான அதிகாரங்கள் அரசாங்க அதிபருக்கும் மஜிஸ்ட்ரேட்டுக்கும் வழங்கப்படும். ஊடகங்கள் மீது கட்டுப்பாடு கொண்டுவரமுடியும். தேவைப்படின் தணிக்கையும் அமலுக்கு வரலாம்.

இலங்கையில் அவசரநிலை அமலுக்கு வருவது இது முதன் முறையல்ல. கடந்த 30 ஆண்டுகளில் பலமுறை அங்கு பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2018 மார்ச் மாதம் நடைபெற்ற இனக் கலவரத்தின் போதும் அவசர நிலை அமலுக்கு வந்தது

 

click me!