இலங்கையில் மீண்டும் விடுதலை புலிகள் தாக்குதல்... பாதுகாப்பை பலப்படுத்தும் இலங்கை ராணுவம்..!

By Kevin Kaarki  |  First Published May 16, 2022, 10:59 AM IST

பொருளாதார நெருக்கடியோடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் இலங்கையில், இருந்து பலர் தமிழகத்திற்கு அகதிகளாகவும் வந்து கொண்டு இருக்கின்றனர்.


இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம் இன்றி அந்த நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர். பொருளாதார நெருக்கடி சூழல் காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை தலைநகரில் தொடர் போராட்டம், அடிக்கடி கலவரங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தலைநகர் கொலம்போவில் எப்போதும் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த அந்நாட்டில் ராணுவ பாதுகாப்பிற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. போராட்டம் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். மிக கடுமையான நெருக்கடி மற்றும் பதவி விலகக் கோரி பொது மக்கள் மற்றும் எதிர் கட்சியினர் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக இலங்கை பிரதமர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே விலகுவதாக கடந்த வாரம் அறிவித்தார். இவரை தொடர்ந்து ரனில் விக்ரமசிங்கே பிரதமார பதவி ஏற்று இருக்கிறார். 

Tap to resize

Latest Videos

புதிய பிரதமர்:

இலங்கையின் புதிய பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கு இந்தியா, அமெரிக்கா, சீனா உள்பட பெரும்பாலான நாடுகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. மேலும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேயின் கட்சியும் புதிய பிரதமருக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்து இருக்கிறது. இருந்த போதும், புதிய பிரதமராக ரனில் விக்ரமசிங்கேவை ஏற்க முடியாது என கூறி பொது மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொருளாதார நெருக்கடியோடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வரும் இலங்கையில், இருந்து பலர் தமிழகத்திற்கு அகதிகளாகவும் வந்து கொண்டு இருக்கின்றனர். இதுதவிர இலங்கைக்கு இந்தியா மற்றும் தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகள் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி இருப்பதாக இந்திய உளவுத்துறை சார்பில் இலங்கை ராணுவத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இந்திய உளவுத்துறை:

இதை அடுத்து இலங்கை ராணுவம் சார்பில் இந்திய உளவுத் துறையை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த இந்திய உளவுத் துறை இலங்கையில் மீண்டும் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தலாம் என பொதுவான தகவல் கிடைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இது பற்றி கூடுதல் விசாரணை நடத்தி இலங்கைக்கு தகவல் தெரிவிப்பதாக இந்திய உளவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விடுதலை புலிகள் தாக்குதல் மற்றும் தேச பாதுகாப்பு தொடர்பாக கிடைத்து இருக்கும் அனைத்து தகவல்களையும் உரிய முறையில் விசாரணை செய்ய இலங்கை முடிவு செய்துள்ளது. மேலும் தாக்குதல் செய்தியை அடுத்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை ராணுவம் மேற்கொண்டு வருகிறது. 

click me!