ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை பற்றி பேசிய கனடா அதிபருக்கு இலங்கை கண்டனம்

By SG BalanFirst Published May 20, 2023, 11:06 PM IST
Highlights

நான் சந்தித்த பாதிக்கப்பட்ட தமிழ்ர்களின் கதைகள் மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் குறித்து அலட்சியமாக இருக்கக் கூடாது என்பதை நினைவூட்டிக்கொண்டே இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததன் 14வது ஆண்டு நிறைவையொட்டி கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தமிழர்கள் இனப்படுகொலை குறித்த கருத்துக்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

1983ஆம் ஆண்டு முதல் இலங்கை இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்றுவந்தது. மே 18, 2009 அன்று அந்தப் போர் முடிவுக்கு வந்தது. போர் முடிந்த 14வது ஆண்டு நினைவு தினம் கடந்த வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈழத் தமிழர்கள் அதிகம் வாழும் கனடா நாட்டின் பிரதமர் பிரதமர் ட்ரூடோ, இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் முள்ளிவாய்க்கால் படுகொலை உட்பட பல காரணங்களால் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர், காணாமல் போயுள்ளனர் அல்லது இடம்பெயர்ந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

"நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள், உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் இருக்கிறோம். அவர்கள் இந்த அர்த்தமற்ற வன்முறையால் ஏற்படும் வலியுடன் வாழ்ந்து வருகிறார்கள்" எனவும் ட்ரூடோ கூறியிருக்கிறார்.

"நாடு முழுவதும் உள்ள சமூகங்களில் பல ஆண்டுகளாக நான் சந்தித்த பாதிக்கப்பட்ட தமிழ் - கனடியர்களின் கதைகள் மனித உரிமைகள், அமைதி மற்றும் ஜனநாயகம் ஆகியவை குறித்து அலட்சியமாக இருந்துவிட முடியாது என்பதை நினைவூட்டுகின்றன" எனவும் ட்ரூடோ குறிப்பிட்டார்.

இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்ரூடோவின் இந்தக் கருத்துகள் நிராகரித்துள்ளது. கொழும்பில் உள்ள கனடா நாட்டு தூதர் எரிக் வால்ஷிடம் ட்ரூடோவின் கருத்துக்களுக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

ஒரு நாட்டின் தலைவர் இவ்வாறு பொறுப்பற்ற கருத்துகளைக் கூறுவது அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குப் பதிலாக கனடாவிலும் இலங்கையிலும் வெறுப்பை வளர்க்கும் என இலங்கை வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

click me!