sri lanka crisis: இலங்கை பொருளாதார சிக்கல் இன்னும் ஓர் ஆண்டு நீடிக்கும்: அதிபர் விக்ரமசிங்கே குமுறல்

By Pothy Raj  |  First Published Aug 6, 2022, 3:24 PM IST

இலங்கையில் நிலவும் பொருளாதாரச் சிக்கல் இன்னும் ஓர் ஆண்டு நீடிக்கும் என்று கணிக்கறேன் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே வேதனை தெரிவித்துள்ளார்.


இலங்கையில் நிலவும் பொருளாதாரச் சிக்கல் இன்னும் ஓர் ஆண்டு நீடிக்கும் என்று கணிக்கறேன் என்று அதிபர் ரணில் விக்ரமசிங்கே வேதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மிகவும் மோசமான பொருளாதாரச் சூழல் நிலவுகிறது. பொருளாதாரத்தை சீரழிக்க காரணமாக இருந்த முன்னாள்  அதிபர்கோத்தபய ராஜபக்ச, அதிபர் மகிந்த ராஜபக்ச இருவரும் பதவி விலகினர். 

Tap to resize

Latest Videos

இலங்கை அரசிடம் அந்நியச்செலாவணி குறைந்ததால், வெளிநாடுகளில் இருந்து எந்தப் பொருட்களையும் இறக்குமதி செய்ய முடியவில்லை. மருந்து, அத்தியாவசியப் பொருட்கள், உணவுப்பொருட்கள், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை விண்ணை மட்டும்அளவு உயர்ந்துவிட்டன. 

அமெரி்க்கா உடனான பேச்சுவார்த்தை அனைத்தும் ரத்து: சீனா அதிரடி அறிவிப்பு

நாட்டின் புதிய அதிபராக வந்துள்ள ரணில் விக்ரசிங்கே நாட்டின் தலையெழுத்தை மாற்றுவார் என்று மக்கள் நம்புகிறார்கள். சர்வதேச செலாவணி நிதியம், உலகவங்கியிடம் கடன் கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் கொழும்பு நகரில் நடந்த ஒரு கருத்தரங்களில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று பங்கேற்றார் அப்போது அவர் பேசியதாவது:

இலங்கையில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்ய வேண்டியது அவசியம். குறிப்பாக அதிகமான வரிவிதிப்பு வதிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இலங்கையில் நிலவும் பொருளாதாரச்சிக்கல், நிதிக்கஷ்டம் இன்னும் ஓர் ஆண்டு வரை நீடிக்கும். அதாவது அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை நீடிக்கலாம். 

ஆதலால், சரக்குப் போக்குவரத்து, அணுசக்தி ஆகியவற்றில் இலங்கை தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். சரக்குப் போக்குவரத்தில் அதிகமான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததைப் பாருங்கள் சரக்குப் போக்குவரத்து பெரும்பங்கு வகிக்கிறது.

இலங்கை நாடாளுமன்றம் ஆக.9க்கு ஒத்திவைப்பு… என்ன பேசினார் ரணில் விக்ரமசிங்கே?

ஆதலால், கொழும்பு, ஹம்பன்தோட்டா, திரிகோணமலையில் சரக்குப் போக்குவரத்து பெரும் பங்கு வகிக்கும். இரு பெரிய துறைமுகங்களை எவ்வாறு நாம் பயன்படுத்தப்போகிறோம் என்பதில் இருக்கிறது.

அதிகமான வரி விதிப்பு விதிக்க வேண்டிய தேவை இப்போது இருக்கிறது. முதலில் பொருளாதார மீட்சி அதன்பின் சமூக நிலைத்தன்மை. 

பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு அணு சக்தி வாய்ப்பை நாம் தேட வேண்டும். அதிகமான அணுசக்தி இருந்தால் இந்தியாவுக்கு கூட விற்கலாம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்த வேண்டும். இலங்கை மக்களாகஇருந்து சிந்திக்காமல் வெளயே இருந்து சிந்திக்க வேண்டும்.

சர்வதேச செலாணி நிதியத்திடம் கேட்டுள்ள கடன் குறித்து சட்டம்மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் பேசி வருகிறார்கள். வெளிநாட்டுக்கடன், அதிகாரபூர்வகடன் என்று பார்க்கும்போது, ஆசியப்பிராந்தியத்தில் நாம் மோசமாகச் சிக்கிக்கொள்கிறோம்.

இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவரின் சகோதரர்கள் நாட்டைவிட்டு வெளியேற தடை நீட்டிப்பு

இலங்கையில் 60 லட்சம் மக்கள் சத்தான சரிவிகித உணவு இன்றி தவிக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு கூடுதல் நிதி மூலம் உதவ வேண்டும். தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசியல் நிலைத்தன்மை அவசியம்

இவ்வாறு விக்ரமசிங்கே தெரிவித்தார்

click me!