china: taiwan: united states: pelosi: அமெரி்க்கா உடனான பேச்சுவார்த்தை அனைத்தும் ரத்து: சீனா அதிரடி அறிவிப்பு

By Pothy Raj  |  First Published Aug 5, 2022, 5:10 PM IST

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தங்களின் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு பயணம் மேற்கொண்டதையடுத்து, அமெரி்க்காவுடனான காலநிலை மாற்றம் முதல் ராணுவ உறவுகள் வரை மற்றும் போதை மருந்து தடுப்பு தொடர்பான அனைத்துப் பேச்சுவார்த்தையையும் உடனடியாக ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது.


அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தங்களின் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு பயணம் மேற்கொண்டதையடுத்து, அமெரி்க்காவுடனான காலநிலை மாற்றம் முதல் ராணுவ உறவுகள் வரை மற்றும் போதை மருந்து தடுப்பு தொடர்பான அனைத்துப் பேச்சுவார்த்தையையும் உடனடியாக ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது.

தைவானை தங்கள் நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. இதனால் தைவானுக்கு எந்த நாட்டைச் சேர்ந்த தலைவர்களும், பிரதிநிதிகளும் செல்வதையோ, அந்நாட்டின் சுயாட்சிபற்றியோ அல்லது சுதந்திரத்தைப் பற்றி பேசுவதை சீனா விரும்புவதில்லை. 

Tap to resize

Latest Videos

அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசிக்கு தடை: பதிலடி தரத் தொடங்கியது சீனா

 

இந்நிலையில் அமெரிக்கபிரதிநிதிகள் சபைத் தலைவர் நான்சி பெலோசியின் ஆசியப் பயணத்தில் தைவானுக்கு வரத்திட்டமிட்டார். ஆனால், நான்சி பெலோசி தைவான் செல்வதை விரும்பாத சீன அரசு அதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. ஆனால் சீனாவின் எதிர்ப்பை கண்டுகொள்ளாத நான்சி பெலோசி தைவானுக்குவந்து சென்றுவிட்டார்.

பொறுமையா இருங்க! நாங்க சொன்னதைச் செய்வோம்: தைவானுக்கு பதிலடி தரத்தயாராகும் சீனா

நான்சி பெலோசி வருகையால் ஆத்திரமடைந்த சீனா, தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவுக்கான அமெரி்க்க தூதரை நேரில் கடுமையான வார்த்தைகளால் கண்டித்து எச்சரிக்கை செய்தது. 

தைவானின் கடற்பகுதி, வான்வெளியில் போர்விமானங்களை  பறக்கவிட்டு போர் பயிற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. ஏவுகணைகளை கடல்பரப்பில் ஏவி சீனா பரிசோதித்து வருகிறது. 
இதற்கிடையே அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு சீனாவுக்கு வரத் தடைவிதித்து சீனா உத்தரவிட்டது.

இந்நிலையில் அமெரிக்காவுடன் பருவநிலை மாற்றம் முதல் ராணுவ நடவடிக்கைகள் வரையிலும் போதைமருந்து கடத்தல் தடுப்பு தொடர்பான பேச்சுவார்த்தை அனைத்தையும் ரத்து செய்வதாக சீனா அறிவித்துள்ளது.

நான்சி பெலூசி வருகை! 24 மணிநேரத்தில் தைவானுக்கு 'செக்' வைத்த சீனா

அமெரிக்காவின் ராணுவ அதிகாரிகள், சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சு நடத்தப்பட இருந்தது அந்த பேச்சு வார்த்தை அனைத்தும் ர்தது செய்யப்பட்டது. சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் அகதிகள், கிரிமினல் விசாரணைகள், கைதிகளை பரிமாற்றம் செய்தல், சட்டவிரோதமாக போதை மருந்துக்கடத்தல், காலநிலை மாற்றம் தொடர்பான பேச்சு அனைத்தும் உடனடியாக ரத்து செய்யப்படுவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

click me!