பற்றி எரியும் இலங்கை.. சைலண்ட்டாக வெளிநாட்டுக்கு எஸ்கேப்பாக போகும் மகிந்த ராஜபக்சே?

By vinoth kumarFirst Published May 10, 2022, 11:55 AM IST
Highlights

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர் போராட்டங்களால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இலங்கையில் கலவரம் தீவிரமடைந்துவரும் நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே  மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெடித்தது வன்முறை

இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர் போராட்டங்களால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

10 பேர் பலி

இதனையடுத்து, ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டகார்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதில், ஆளுங்கட்சி எம்.பி. உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து இலங்கையின் குருங்கலாவில் உள்ள பிரதமர் மகிந்த ராஜபக்சே வீட்டின்மீது போராட்டக்காரர்கள் திடீர் தாக்குதல் நடத்தி தீ வைத்தனர். ஆளுங்கட்சியினரின் வீடுகளுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதனையடுத்து, ஊரடங்கு நாளை வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

வெளிநாடு தப்பி செல்ல திட்டம்

இந்நிலையில், மகிந்த ராஜபக்‌சே பிரதமர் மாளிகையில் இருந்து வெளியேறியதாக தகவல் வெளியாகியது. பலத்த ராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து வெளியேறிய அவர் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் அவர் வெளிநாடு தப்பிச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

click me!