Sri Lanka Crisis 2022: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள் பற்றாக்குறையால் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் இனி நாட்டில் தெரு விளக்குகள் எரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எரிப்பொருள் இறக்குமதிக்கு போதிய அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால் ஒரு நாளைக்கு 13 மணி நேரம் மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள் பற்றாக்குறையால் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் இனி நாட்டில் தெரு விளக்குகள் எரியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் எரிப்பொருள் இறக்குமதிக்கு போதிய அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாததால் ஒரு நாளைக்கு 13 மணி நேரம் மின்வெட்டு அமலுக்கு வந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி:
இதனால், நாடு முழுவதும் உள்ள தெரு விளக்குகளை மூடுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளாதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியால், நாடு முழுவதும் அனைத்தும் பொருட்களின் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு மக்களால் முடியாமல் திண்டாடி வருகின்றனர்.மேலும் எரிவாயு சிலண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு உணவகங்கள் மூடப்பட்டு வருகிறது. மக்கள் ஒரு நாளைக்கு இரு வேளை உணவு முறைக்கு மாறி வருகின்றனர்.
மக்கள் திண்டாட்டம்:
வெளிநாடுகளில் பெட்ரோல், டீசல் இறக்குமதி செய்ய முடியாமல், பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. சில நிலையங்களில் வன்முறைகள் நிகழாமல் இருக்க இராணுவ பாதுகாப்புடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெட்ரோல் , டீசல் வாகனங்களுக்கு போட்டு செல்கின்றனர்.பண வீக்கம், நிதி பற்றாக்குறை, அந்நிய செலாவணி குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. பால் பவுடர், கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களின் விலையும் உச்சத்தை எட்டியுள்ளன. இதனால் நாட்டில் உணவு பொருட்களின் பதுங்கலை தடுக்க, அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பணவீக்கம், பற்றாக்குறை:
மார்ச் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 18.7 % ஆக இருந்ததாகவும்,உணவுப் பணவீக்கம் 30.2% ஐ எட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக மோசமான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் நிதி பற்றாக்குறை 2020 ஆம் ஆண்டில் 5 % ஆக இருந்த நிலை 2021 ல் 15% ஆக அதிகரித்தது. 2021 நிதியாண்டில் மூன்றாவது காலாண்டின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 1.5% ஆக இருந்தது.இந்தியாவிலிருந்து 500 மில்லியன் டாலர் கடன் வரியின் கீழ் டீசல் சனிக்கிழமை இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு மின்வெட்டு நேரம் குறைக்கப்பட்டாலும், மே மாதம் வரை இந்த நிலை தொடரும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
மின்வெட்டு:
எங்களால் வேறு எதுவும் செய்ய முடியாது என்று கவலை தெரிவிக்கு மின்சாரத்துறை அமைச்சர், நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வரலாறு காணாத அளவிற்கு குறைந்து உள்ளதால் நீர்- மின்சார திட்டம் கைக்கொடுக்கவில்லை எனவும் கோடை காலம் என்பதால் மின்சாரம் தேவை உச்சத்தை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும் இலங்கை தலைநகர் கொழும்பில் இந்த வாரம் முழுவதும் மின்வெட்டு அமலில் இருப்பதால், கொழும்பு பங்குச் சந்தை (CSE) தினசரி வர்த்தகத்தை வழக்கமான நான்கரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
வரி குறைப்பு, இயற்கை விவசாயம்:
இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு நாட்டின் வரி விதிப்பு முறையில் செய்த மாற்றமே காரணம் என்று கூறப்படுகிறது. 15% இருந்து 8 % ஆக வரி குறைக்கப்பட்டதனால், நாட்டில் வரி வருவாய் அடி வாங்க துவங்கியது. மேலும் போதிய ஆய்வின்றி இயற்கை விவசாயத்தை அரசு நடைமுறைபடுத்தியதால், இலங்கயில் நன்கு விளையும் தேயிலை, மிளகு, ஏலம், காய்கறி உற்பத்தி சுமார் 30% குறைய தொடங்கியது. இலங்கை வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடனின் அளவு 51 பில்லியன் டாலர். அதில் உடனடியாக திருப்பி கொடுத்தாக வேண்டிய கடனின் மதிப்பு 7 பில்லியன் டாலர். ஆனால் அந்நிய செலாவணி கையிருப்பு 2 பில்லியன் டாலர் மட்டுமே இருக்கிறது. அதுவும் அன்றாட இறக்குமதிக்கு அளிக்ககூட போதவில்லை.