பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சே, அவரது மகன் நமல் உள்ளிட்ட 17 பேர் இலங்கையிலிருந்து வெளியேற தடைவிதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சே, அவரது மகன் நமல் உள்ளிட்ட 17 பேர் இலங்கையிலிருந்து வெளியேற தடைவிதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
undefined
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபட்சே, பிரதமர் மகிந்த ராஜபட்சே ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்நிலையில் திங்கள்கிழமையன்று அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த போராட்டக்காரர்கள் மீது வன்முறை நடத்தப்பட்டது. இதில் எதிர்தர்ப்பினரும் திருப்பி தாக்குதல் நடத்த அது கலவரமாக மாறியது.இந்த வன்முறையில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். பெளத்த துறவிகள், கத்தோலிக்க பாதிரியார்கள் என இந்த வன்முறையில் பலத்த காயமடைந்த 250க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதனிடையே இது தொடர்பாக விசாரிக்க காவல்துறையினருக்கு கொழும்பு நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட்
உத்தரவிட்டது.
மேலும் ராஜபட்ச மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்ய பிடிவாரண்ட் பிறபிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கலவரம் தொடர்பாக சந்தேகத்திற்கு உள்ளானவர்களை கைது செய்ய காவல்துறையினருக்கு ஏற்கனவே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதால் இந்த கோரிக்கை நீதிமன்றம் ஏற்கவில்லை.
மேலும் படிக்க:Sri Lanka crisis ; இந்தியாவில் தஞ்சம் அடைந்ததா ராஜபக்சே குடும்பம்.! சமூக வலை தளங்களில் பரவும் தகவலால் பரபரப்பு
இந்நிலையில் தலைநகர் கொழும்புவில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீது தாக்கல் நடத்த ஏவி விட்டு , மர்ம கும்பலை அனுப்பியது ராஜபட்சேயும் அவரது கூட்டாளிகளும் தான் என்று தாக்குதலில் சிக்கிய மக்கள் கூறுகின்றனர். மேலும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை தடி, கம்பு உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, பிரதமர் பதவியை ராஜானாமா செய்த மகிந்த ராஜபட்சே, தனது அரசு இல்லத்தை விட்டு வெளியேறி, நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள கடற்படை தளத்தல் மறைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தான் மக்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சே, அவரது மகன் நமல் உள்ளிட்ட 17 பேர் இலங்கையிலிருந்து வெளியேற தடைவிதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: இலங்கை வன்முறையில் சிறையிலிருந்து தப்பித்த கைதிகள்.! தமிழகத்திற்குள் நுழைய வாய்ப்பு..? உளவுத்துறை எச்சரிக்கை