வடகொரியாவில் முதன்முறையாக ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த வடகொரியா முழுவதும் முழு உரடங்கை அதிபர் கிம் ஜாங் உன் அமுல்படுத்தியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையிலும், வடகொரியாவில் கொரோனா பரவல் எத்தகைய பாதிப்பும் பதிவு செய்யப்படாமல் இருந்து வந்தது. மேலும் நாட்டின் எல்லைகளில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவலை குறைவாக இருப்பதாக வடகொரியா தெரிவித்து வந்தது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் விதிக்கப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன. இந்நிலையில் தற்போது பியோங்யாங் நகரில் முதல் முறையாக ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஒமைக்ரான் வைரஸின் திரிபு பிஏ.2 வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் ஒமைக்ரான் பாதிப்பு தற்போது ஒருவருக்கு மட்டும் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பரவல் குறித்து வடகொரியா தொழிலாளர் கட்சி ஆலோசனை நடத்திய அதிபர் கிம், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.மேலும் முதல்முறையாக ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, முழு பொது
முடக்கத்தை அதிபர் கிம் ஜாங் உன் அமல்படுத்தியுள்ளார்.
மேலும் படிக்க: புறப்பப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தில் பயங்கர தீ விபத்து.. 122 பயணிகளின் நிலை என்ன?