என் பூனை நிரபராதி... சட்ட போராட்டத்தில் வென்று ரூ. 95 லட்சம் பெற்ற பெண்.. என்ன ஆச்சு தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published May 12, 2022, 12:15 PM IST

மேலும் குற்றம்சாட்டப்பட்ட விவகாரத்தில் அரசு அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் டேனியலி தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.


ஆசை ஆசையாக வளர்த்து வந்த பூனைக்கு எதிராக குற்றம் சுமத்தியவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்திய பெண் அதில் வெற்றி பெற்ற சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறி இருக்கிறது. 

மூன்று ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்திய அமெரிக்க பெண் தான் வளர்த்து வந்த பூனைக்கு எதிரான வழக்கில் வெற்றி பெற்று இந்திய மதிப்பில் ரூ. 95 லட்சம் வரை இழப்பீடு பெற்று இருக்கிறார். இதில் மூன்று ஆண்டுகளுக்கான அபராத தொகை மட்டும் ரூ. 23 லட்சம் அடங்கும். 

Tap to resize

Latest Videos

முன்னதாக 2019 வாக்கில் அருகாமை பகுதியில் மிஸ்கா என்ற பூனை அத்துமீறி நுழைந்து மற்ற விலங்குகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது என குற்றம்சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு புகாராக மாறி, மிஸ்கா என்ற பூனை சிறிது காலம் பூனைகளுக்கான சிறையிலும் அடைக்கப்பட்டது. 

அபராதம்:

இதோடு பூனையை வளர்த்து வரும் டேனியலி அபராதம் செலுத்தவும் வலியுறுத்தப்பட்டார். இதன் காரணமாக ஆத்திரம் அடைந்த டேனியலி புகாரை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும் இந்த விவகாரத்தில் அரசு அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் அவர் வழக்கில் குற்றம்சாட்டி இருந்தார்.

“பெல்வியூ பகுதியை சேர்ந்த அப்பாவி பூனை மீது சுமத்தப்பட்ட அநியாமம் மிக்க குற்றச்சாட்டு இது. வழக்கில் கிடைத்து இருக்கும் செட்டில்மெண்ட் தொகை வளர்ப்பு பூனை தொடர்பான வழக்குகளில் வாஷிங்டன் மாகாண வரலாற்றில் மிகவும் அதிகம் ஆகும்,” என டேனியலி வழக்கறிஞர் தெரிவித்தார். 

தீர்ப்பு:

இந்த தீர்ப்பு கிடைக்க மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. தீர்ப்பில் மிஸ்கா அத்துமீறி எங்கும் நுழையவில்லை என்றும், எந்த விலங்குகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றும் இந்த குற்றச்சாட்டு முழுக்க முழுக்க அர்த்தமற்றவை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. 

1994 கனடா ஆய்வு முடிவுகளின் படி பயணத்தின் போது செல்லப் பிராணியை பராமரிக்க தவறுதல் (34.6 சதவீதம்), போதிய நேரமின்மை (28.6 சதவீதம்), அடைக்கலம் கொடுக்க தவறுதல் (28.3 சதவீதம்), செல்லப் பிராணிகளை பிடிக்காமல் இருத்தல் (19.6 சதவீதம்) போன்ற காரணங்களால் செல்லப் பிராணிகளை பலர் வளர்ப்பது இல்லை என தெரியவந்துள்ளது.

click me!