குண்டில் நூல்... அந்த நூலின் மறு நுனியில், ஆயிரம் ரூபாய்த்தாள்! நடுங்க வைக்கும் தீவிரவாதிகளின் டெக்னீக்!

By sathish k  |  First Published Apr 22, 2019, 7:48 PM IST

கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் உள்ள தேவாலயம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கும் செய்யும் போது குண்டுவெடித்தது. 


கொழும்பு கொச்சிக்கடை சர்ச் அருகே கொழும்புத் துறைமுக 4ஆம் இலக்க நுழைவு வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனிலிருந்து வெடிகுண்டு பாதுகாப்பு தரப்பினரால் வெடிகுண்டை செயலிழக்க செய்து கொண்டு இருக்கும் போது வெடித்துள்ளது.

Latest Videos

நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனில், 4 சமையல் எரிவாயுச் சிலிண்டர்களை இணைத்துப் பொருத்தப்பட்டிருந்த இந்த குண்டு,  அதிரடிப் படையினரின் குண்டு செயழிலக்கும் பிரிவால் செயலிழக்கவைக்க நிறுத்தி வைத்திருந்துள்ளனர். 

அப்போது அந்த வேனில் இருந்த குண்டில் நூல் ஒன்று கட்டப்பட்டு இருந்ததாகவும் அந்த நூலின் மறு நுனியில், ஆயிரம் ரூபாய்த்தாள் ஒன்று கட்டப்பட்டு இருந்ததாகவும், ரூபாய்த் தாளை காண்பவர்கள், அதனை எடுக்க முற்படும்போது, ​வெடிகுண்டு வெடிக்கும் வகையிலேயே சூட்சமமான முறையில் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்ததாகவும் அதிரடிப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும்,  கொச்சிக்கடை அருகே மக்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் குண்டு ​தகர்க்கச் செய்யப்பட்ட போது, பல வீடுகளின் கூரைகள்,  சேதமடைந்துள்ளதுடன் கொழும்புத் துறைமுகத்தின் மதிலும் உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிகிறது.

click me!