9 வது முறையாக மீண்டும் குண்டு வெடிப்பு... தொடர் மரண ஓலத்தால் இலங்கையில் பீதி..!

By Thiraviaraj RMFirst Published Apr 22, 2019, 5:04 PM IST
Highlights

நேற்று முதல் குண்டு வெடிப்பால் அதிர்ந்து வரும் இலங்கையில் 9 வது இடத்தில் சற்று முன் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். 

நேற்று முதல் குண்டு வெடிப்பால் அதிர்ந்து வரும் இலங்கையில் 9 வது இடத்தில் சற்று முன் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர். 

இயேசு உயிர்த்தெழுந்த நாளான நேற்று முதன் முறையாக கொச்சிக்கடாவில் புனித ஆண்டனி சர்ச் குண்டு வெடிக்கத் தொடங்கியது. 30 நிமிடங்களில் அடுத்தடுத்து நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியில் ஒரு சர்ச், மட்டக்களப்பு சர்ச் ஆகிய கட்டடங்கள் ரத்த சகதியில் மூழ்கி கிடக்கிறது. சின்னமன் கிராண்ட் ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல்கள் குண்டு வெடிப்பில் மேலும் ஐந்து இடங்கள் சின்னாபின்னமாகின.

அதனை அடுத்து நேற்று 6 மணி நேரங்களுக்கு பிறகு தற்போது மேலும் புதிதாக 2 ஹோட்டல்களான தெய்வாலா மிருகக்காட்சி சாலைக்கு எதிரில் உள்ள  ஹோட்டலிலும், டிமாட்டகொடா பகுதியிலுள்ள விடுதியிலும் குண்டு வெடித்தது. நேற்று மட்டும் 8 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் இதுவரை 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு அவசர நிலை பிரகடணத்தை அதிபர் சிறிசேன அறிவித்துள்ளார். 

இந்நிலையில் சற்று முன்  9வது முறையாக கொச்சிக்கடை கந்தள தேவாலயத்தில் வைக்கப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்ய முயன்றபோது குண்டு வெடித்துச் சிதறியது. மேலும் பல இடங்களில் குண்டுகள் வைக்கப்பட்டுள்ளனவா? என்கிற இலங்கையில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.  

click me!