நேற்று இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 207 பேராவது உயிரிழந்துள்ளதாக இலங்கை காவல் துறை அறிவித்திருந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளது. 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நேற்று ஈஸ்டர் தின பண்டிகை கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இலங்கையின் கொழும்பு, நீர்கொழும்பு, கொச்சிக்கடை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் தேவாலயங்களிலும், நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
இதில் பலியானோரில் சுமார் 35 பேர் வெளிநாட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. உயிரிழந்த வெளிநாட்டவர்களில் இரண்டு பேர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலில் சில பிரிட்டிஷ் குடிமக்களும் சிக்கியுள்ளதாக இலங்கைக்கான இங்கிலாந்து உயர் ஆணையர் ஜேம்ஸ் தவுரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த தொடர் குண்டுவெடிப்புக்கு, இதுவரையில் இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்தக் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக ஏழு பேரை கைது செய்துள்ளதாக இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சர் ருவான் விஜேவர்தென் தெரிவித்துள்ளார்.
இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத இந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்பு காரணம் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. மேலும், தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்திய அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் அரசு தகவல் தெரிவித்துள்ளது.