ஸ்பெயினில் 44 வீடுகள் உடைய கிராமம் ஒன்று வெறும் 2 கோடி ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நம்மில் பெரும்பாலோர் வீடு அல்லது வில்லா வாங்க வேண்டும் என்று கனவு காண்கிறோம். ஆனால் நீங்கள் எப்போதாவது ஒரு முழு கிராமத்தையும் வாங்க வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறீர்களா ? இங்கு ஒரு கிராமமே விற்பனைக்கு வந்திருக்கிறது.
ஸ்பெயினில் உள்ளது சால்டோ டி காஸ்ட்ரோ எனும் கிராமம். இது ஸ்பெயினுக்கும் போர்ச்சுகலுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இருந்து சுமார் மூன்று மணிநேர பயணத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கைவிடப்பட்டு பாழடைந்து கிடக்கின்றது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை ஊத்தப்போகுது.! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா ? முழு விபரம்
இங்கு வெறும் வீடுகள் மட்டுமின்றி பள்ளி, தேவாலயம், விடுதி, நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானங்கள், பார் வசதி என எல்லாமும் இந்த கிராமத்தில் உள்ளது. இங்கிருந்து போர்ச்சுகல் நாட்டின் எல்லையும் மிகக் குறைந்த தொலைவிலேயே இருக்கிறது. ஏன் இந்த கிராமம் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்திருக்கிறது என்று தெரியுமா ?
சுமார் 1950களில் மின் உற்பத்தி நிலைய நிறுவனம் ஒன்று சால்டோ டி காஸ்ட்ரோ என்ற கிராமத்தை உருவாக்கி, அங்கு மக்களை குடியமர்த்தியது. அவர்கள் இந்த கிராமத்துக்கு அருகில் இருக்கும் அணையில் தொழிலாளர்களாக பணியாற்றினர். கிராமத்தின் மக்கள் தொகை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 80களின் பிற்பகுதியில் கிராமம் கைவிடப்பட்டது.
இப்போது இந்த கிராமத்தை சொந்தமாக வைத்திருக்கும் நபர், இதனை சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்துடன் வாங்கியதாகக் கூறியிருக்கிறார். ஆனால் அது தடைபட்டதனால் 5 மில்லியன் யூரோ விலைக்கு இதனை விற்க நினைத்திருக்கிறார். யாரும் வாங்க முன் வராததனால் 2 மில்லியன் டாலர்கள் என விலையை தற்போது குறைத்திருக்கிறார். இது இந்திய மதிப்பு 2.1 கோடி என்று கூறப்படுகிறது. இந்த செய்திதான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்காக உள்ளது.
இதையும் படிங்க..பாஜகவில் சேரப் போகும் முக்கிய தலைகள்.. திமுக எங்கள் எதிரி தான், ஆனால் ? அண்ணாமலை சொன்ன சீக்ரெட் !