Python:5 அடி நீள முதலையை ‘அப்படியே’ விழுங்கிய பர்மா மலைப்பாம்பு: வயிற்றைக் கிழித்து வெளியே எடுத்த வைரல் வீடியோ

By Pothy Raj  |  First Published Nov 12, 2022, 2:12 PM IST

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள வனஉயிரியல் பூங்காவில் 5 அடி நீள முதலையை பர்மா மலைப்பாம்பு விழுங்கியது. அந்த மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து முதலையை எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.


அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள வனஉயிரியல் பூங்காவில் 5 அடி நீள முதலையை பர்மா மலைப்பாம்பு விழுங்கியது. அந்த மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து முதலையை எடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது.

நியூஸ்வீக் இணைளத்தில் இது தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

சூரிய மின்சக்திக்கு மாறும் இந்தியா! 5 மாதங்களில் 400 கோடி டாலர் எரிபொருள் சேமித்து சாதனை

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் எவர்கிலேட் தேசிய வனஉயிரியல் பூங்கா உள்ளது. இந்த வனஉயிரியல் பூங்காவில் பர்மா இனத்தைச் சேர்ந்த மலைப்பாம்பு வளர்க்கப்பட்டு வந்தது. இந்த மலைப்பாம்பு பொதுவாக 18 அடிமுதல் 20 அடிவரை வளரக்கூடியது. இந்நிலையில் கடந்த வாரம் ஒரு பர்மிய மலைப்பாம்பு வயிற்றில் ஏதோ பெரிய இரை இருப்பதை உயிரியல் பூங்கா ஊழியர்கள் பார்த்தனர். அந்த மலைப்பாம்பும், இரையை செரிக்கமுடியாமல் சிரமப்பட்டது.

இதையடுத்து, அந்த மலைப்பாம்பைப் பிடித்து அதன் வயிற்றுப்பகுதியை மருத்துவர்கள் அறுத்துப் பார்த்தபோது, அதிர்ச்சி அடைந்தனர். மலைப்பாம்பின் வயிற்றில் 5 அடி நீள ராட்சத முதலை இருந்தது. உருவத்தில் மிகப்பெரிதான பர்மிய மலைப்பாம்பு, 5 அடி நீள முதலையை அப்படியே விழுங்கியுள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rosie Moore (@rosiekmoore)

மலைப்பாம்பின் வயிற்றுக்குள் 5 அடி நீள முதலை இருப்பது குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் மருத்துவர் ரோஸி மூரே பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இதுவரை ஒரு கோடிபேர் பார்த்துள்ளனர். இந்த மலைப்பாம்பின் வயிற்றில் இருந்து இறந்த நிலையில் 5 அடி நீள முதலை வெளியே எடுக்கப்பட்டது

ட்விட்டர் நிறுவனம் திவாலாகிவிடும்! ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்

புவிஅறிவியல் அறிஞர்கள் கூறுகையில் “ ப்ளோரிடா மாகாணத்தில் பர்மிய மலைப்பாம்புகளை கருணைக் கொலை செய்வது அவசியம். தெற்கு ப்ளோரியாவில் உள்ள மிதவெப்பமான சூழலில், பர்மிய மலைப்பாம்புகள் அதிக இனப்பெருக்கம் செய்கின்றன, நீண்டகாலம் வாழ்கின்றன. இந்த மலைப்பாம்புகள் அதிக காலம் வாழ்வதால், பிற உயிரினங்களுக்கு ஆபத்தாக இருக்கிறது. எவர்கிளேட் வனஉயிரியல் பகுதியை இந்த பர்மிய மலைப்பாம்புகள் ஆக்கிரமித்துவிட்டன” எனத் தெரிவித்தனர்.

பர்மிய மலைப்பாம்புகள், அமெரி்க்காவுக்கு செல்லப்பிராணியாகக் கொண்டுவரப்பட்டன. ஆனால், கடந்த 1970களில் இந்த பர்மிய மலைப்பாம்புகளை வனப்பகுதியில் விட்டபின், ஏராளமாகப் பெருகிவிட்டன.

பருவநிலை மாற்றத்தால் பூமியில் உள்ள 65% பூச்சிகள் அழிந்து போகும்.. ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

மலைப்பாம்புகளுக்கு இயற்கையாக வேட்டையாடும் திறன் இல்லை. மாறாக மற்ற விலங்குகள் வேட்டையாடியதை உண்ணும் வழக்கம் கொண்டவை. குறிப்பாக பறவைகள், பாலூட்டி வகைகளை உண்ணும். ப்ளோரிடா மாகாணத்தில் எத்தனை பர்மிய மலைப்பாம்புகள் உள்ளன என்ற கணக்கு ஏதும் இல்லை. ஆனால், தோரயமாக ஒரு லட்சம் பாம்புகள்வரை இருக்கலாம் எனத் தெரிகிறது

click me!