57 இஸ்லாமிய நாடுகள் சேர்ந்து வைத்த ஆப்பு...!! அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் பாகிஸ்தான்...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 8, 2020, 12:36 PM IST
Highlights

இந்நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டம் சவுதி அரேபியா ஆதரவுடன் ஜெட்டாவில் நாளை நடக்க உள்ளது . 
 

57 இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து நடத்த உள்ள இஸ்லாமிய கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனை விவாதிக்கப்படாது என  தகவல் வெளியாகியுள்ளது .  அக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் பாகிஸ்தானின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன . கடந்த ஆண்டு இறுதியில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் ,   சீனாவின் உதவியுடன் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக்க  முயற்சிசெய்து அதை ஐநா மன்றம் வரை  கொண்டு சென்றது பாகிஸ்தான்.

 

சர்வதேச நாடுகள் மூலம் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சித்து அதில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தங்களுக்கு ஆதரவாக சுமார் 57  நாடுகள் கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை  அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி அதில் காஷ்மீர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியது.  சமீபத்தில்  பாகிஸ்தான் வந்திருந்த சவுதி இளவரசர் இஸ்லாமிய கூட்டமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்   குழுக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அதில் சர்வதேச நாடுகளின் எல்லை பிரச்சனை மற்றும் மனித உரிமை மீறங்கள் குறித்து விவாதிக்கப்படும்  என அறிவித்திருந்தார் .  இந்நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டம் சவுதி அரேபியா ஆதரவுடன் ஜெட்டாவில் நாளை நடக்க உள்ளது . 

இந்த கூட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் அதற்கு சவுதியின் ஆதரவு தேவை ,  ஆகவே  நாளை நடக்க உள்ள கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான்  கோரிக்கை வைத்தது .  ஆனால் அதை சவுதி அரேபியா நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானே  தெரிவித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச நாடுகளை கூட்டி இந்தியாவுக்கு அழுத்தம்கொடுக்க முயற்சித்த நிலையில் தற்போது இஸ்லாமிய நாடுகளும் பாகிஸ்தானில் கோரிக்கையை புறந்தள்ளி இருப்பது இம்ரான்கானுக்கு  மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  

click me!