south korea covid:தென் கொரியாவில் கைமீறிச்செல்லும் கொரோனா தொற்று: ஒரேநாளில் 6 லட்சம் பேர் பாதிப்பு

By Pothy Raj  |  First Published Mar 17, 2022, 1:14 PM IST

south korea covid:தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று கைமீறிச் செல்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.


தென் கொரியாவில் கொரோனா வைரஸ் தொற்று கைமீறிச் செல்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

Latest Videos

undefined

6 லட்சம்

கடந்த 24 மணிநேரத்தில் தென் கொரியாவில் புதிதாக 6 லட்சத்து21 ஆயிரத்து 328 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 62 பேர் வெளிநாட்டினர். ஒட்டுமொத்த பாதிப்பு 8.25 லட்சமாக அதிகரித்துள்ளது என கொரியா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புத் தெரிவித்துள்ளது

55% அதிகரிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தென் கொரியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு 55% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப்பின் இதுபோன்று கொரோனா தொற்று அதிகரிப்பது இதுதான் முதல்முறை, அதிலும் லட்சக்கணக்கில் அதிகரிப்பது இதுதான் முதல்முறையாகும். 

தென் கொரியாவில் கொரோனாவில்உயிரிழப்பு வீதமும் இருமடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 489 பேர் உயிரிழந்துள்ளதால், மொத்த உயிரிழப்பு 11,481 ஆகஅதிகரித்துள்ளது.

மீண்டும் லாக்டவுன்

கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததையடுத்து, கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது தென் கொரியஅரசு. ஆனால், கட்டுப்பாடுகள் குறைந்தவுடன் மீண்டும் தொற்று உயரத்தொடங்கியுள்ளது. இதனால் சுயதொழில் செய்வோர், வர்த்தகம் செய்வோர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்

தென் கொரியாவில் லாக்டவுன் கொண்டுவரப்படுமா அல்லது கட்டுப்பாடுகள் மட்டும் தீவிரமாக்கப்படுமா என்பது குறித்து நாளை(வெள்ளிக்கிழமை) அந்நாட்டு அரசு அறிவிக்க இருக்கிறது. தற்போதுவரை 6 பேருக்கு மேல்ஒரு இடத்தில் கூடக்கூடாது என்ற விதிமட்டும் கடுமைாயாகப் பின்பற்றப்பட்டு வருகிறது

பாதிப்பு குறைவு

தென் கொரியாவில் பரவிவருவது ஒமைக்ரான் வைரஸ் என்பதால் பெரிதாக உயிரிழப்புகள் ஏதுமில்லை. ஆனால், ஒமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்தால் மட்டுமே சிக்கல் ஏற்படும். தென் கொரியாவில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதால், லேசான பாதிப்புடன் மீண்டு வருகிறார்கள். இருப்பினும் திடீரென பாதிப்பு லட்சக்கணக்கில் அதிகரிப்பதும், மீண்டும் கட்டுப்பாடுகள் கொண்டுவருவதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைநகர் சியோலில் மட்டும் 1.28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், ஜியான்ஜி மாகாணத்தில் 1.81 லட்சம் பேரும், இன்சியான் நகரில் 32ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தென் கொரியாவில் 5.20 கோடி மக்களில் 3.22 கோடி மக்கள் தடுப்பூசி செலுத்தியுல்ளனர். 

click me!