WHO : மீண்டும் தலைதூக்கும் கொரோனா - உலக நாடுகளை எச்சரிக்கும் உலக சுகாதார மையம்!

By Kevin Kaarki  |  First Published Mar 17, 2022, 12:56 PM IST

உலக நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை பரவல் குறித்த புது எச்சரிக்கை தகவலை உலக சுகாதார மையம் வெளியிட்டு உள்ளது.


உலகம் முழுக்க கொரோனாவைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. பல்வேறு உலக நாடுகளில் கொரோனா தொற்று பரிசோதனை செய்யும் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு இருப்பது மிகப்பெரும் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் விவகாரத்தில் உலக நாடுகள் கவனமுடன் செயல்படவும் அறிவுறுத்தி இருக்கிறது. 

கடந்த ஒரு மாத காலமாக உலகம் முழுக்க கொரோனாவைரஸ் தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தது. எனினும், இந்த நிலை தற்போது மாறி தொடங்கி விட்டது. ஆசியாவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது மற்றும் சீனாவின் ஜிலின் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றொல் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது.

Tap to resize

Latest Videos

பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகள் குறைந்துள்ளதை அடுத்து ஒமிக்ரான் வேரியண்ட் மற்றும் அதன் சார்பு வைரஸ் வேரியண்ட் BA.2 பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது என உலக சுகாதார மையம் தெரிவித்து இருக்கிறது. "சில நாடுகளில் கொரோனா பரிசோதனை குறைந்துள்ளது, இதனால் நாம் பார்ப்பது பெரும் பணிப்பாறையின் நுனி மட்டுமே," என உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் அதோம் தெரிவித்தார்.

சில நாடுகளில் மிக குறைவான தட்டுபூசி வழங்கப்பட்டு இருப்பது, ஏராளமான பொய் தகவல்கள் உள்ளிட்டவைகளும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணங்களாக இருக்கின்றன என்று உலக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவித்தனர். உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென 8 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. 

மார்ச் 7 முதல் மார்ச் 13 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் 1.1 கோடி பேர் புதிதாக கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சுமார் 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஜனவரி மாத இறுதியில் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை முதல் முறையாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. 

உலக சுகாதார மையத்தின் மேற்கத்திய பசிபிக் பகுதிகளான தென் கொரியா மற்றும் சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.  தென் கொரியாவில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 25 சதவீதமும், சீனாவில் 27 சதவீதமும் அதிகரித்து இருக்கிறது.

ஆப்ரிக்காவில் 12 சதவீதம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கை 14 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ஐரோப்பாவில் புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இங்கு இறப்பு சதவீதம் அதகரிக்கவில்லை. மற்ற பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. 

"கொரோனா வைரஸ் தொற்றின் BA. 2 மிக வேகமாக பரவும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். எனினும், இதன் பாதிப்பு விகிதம் மிக தீவிரமாக இல்லை. மேலும் வேறு ஏதேனும் புது வேரியண்ட்கள் கொரோனா வைரஸ் பாதிப்பாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதாக தெரியவில்லை," என உலக சுகாதார மையத்தின் மரியா வேன் கெர்கோவ் தெரிவித்து இருக்கிறார்.

click me!