கொழுந்துவிட்டு எரியும் தென்னாப்பிரிக்கா.. பலி எண்ணிக்கை 72 ஆக உயர்வு.

By Ezhilarasan BabuFirst Published Jul 14, 2021, 12:33 PM IST
Highlights

கொள்ளை தொடர்ந்தால், அடிப்படை உணவுப் பொருட்கள் விரைவில் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாக அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர், ஆனால் அவசரகால நிலையை அறிவிக்க மறுக்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்காவில் கொள்ளை தொடர்ந்தால்  நாட்டில் அடிப்படை உணவுப் பொருட்கள் விரைவில் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஜேக்கப் ஜூமா, ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் தென்னாப்ரிக்கா முழுவதும் கலவரம் பரவியுள்ளது. அங்குள்ள முக்கிய நகரங்களில் கடைகள், வணிக நிறுவனங்கள் கலவரக்கார ர்களால் சூறையாடப்பட்டு வருகிறது. வன்முறையாளர்கள் வணிகவலாகங்கள் உள்ளே புகுந்து, பொருள்களைச் கொள்ளைடித்தும் சூறையாடி வருகின்றார்கள், கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன, இதுவரை நிகழ்ந்த வன்முறை வெறியாட்டத்தில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். 

கொள்ளை தொடர்ந்தால், அடிப்படை உணவுப் பொருட்கள் விரைவில் தீர்ந்துவிடும் அபாயம் இருப்பதாக அமைச்சர்கள் எச்சரித்துள்ளனர், ஆனால் அவசரகால நிலையை அறிவிக்க மறுக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை பிற்பகலுக்குள் சுமார் 200 க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் சூறையாடப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு காலத்தில் நெல்சன் மண்டேலாவின் புகலிடமாக இருந்த தென்னாப்பிரிக்காவின் மிகப் பெரிய டவுன்ஷிப் - சோவெட்டோவில் உள்ள பல ஷாப்பிங் சென்டர்கள் முற்றிலுமாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஏடிஎம்கள் உடைக்கப்பட்டுள்ளன, உணவகங்கள், ஆல்கஹால் விற்கும் கடைகள் மற்றும் துணிக்கடைகள் அனைத்தும் மோசமாக தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 

அதில் காவல்துறை மற்றும் பாதுகாப்பு படையினரால் ஒரு சில கலவரக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் கிட்டத்தட்ட 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சட்ட அமலாக்கங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. குவாசுலு-நடாலில் கால்நடைகளும் திருடப்பட்டுள்ளன, சில பகுதிகளில் கலகக்காரர்களின் தாக்குதலால் அடிக்கடி ஆம்புலன்ஸ்கள் வருவதால் அமைதியின்மை அதிகரித்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திங்கள்கிழமை இரவு ரமபோசா நாட்டு மக்கள் அமைதிகாக்க வேண்டும் என உரையாற்றினார், டர்பனில் ஒரு ரத்த வங்கி சூறையாடப்பட்டதாக வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
 

click me!