ஜாலிக்காக குடிக்கும் பீரில் சிறுநீர் கலப்பதா? - அதிர்ச்சியில் பீர் பிரியர்கள்..!!

Asianet News Tamil  
Published : May 11, 2017, 03:05 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
 ஜாலிக்காக குடிக்கும் பீரில் சிறுநீர் கலப்பதா? - அதிர்ச்சியில் பீர் பிரியர்கள்..!!

சுருக்கம்

source says that urine contamination in beer

குடிக்கும் பீரில் சிறுநீர் கலப்பா? என பலரும் அருவருக்கும் அளவுக்கு, டென்மார்க் நாட்டை சேர்ந்த மதுபான நிறுவனம் ஒன்று, பிஸ்னர் என்ற பீரை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்த பீருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. என்ன, இனி பீர் குடிக்கும் போதெல்லாம், சிங்கமுத்து சொல்வது போல சிறுநீர்தான் ஞாபகம் வரும் என்கிறீர்களா?

கவலை வேண்டாம், சிறுநீரை நேரடியாக  கலந்து தயாரிக்கப்படும் பீர் அல்ல பிஸ்னர்.  மனித சிறுநீரை பயன்படுத்தி  விளைவிக்கப்பட்ட பார்லியில் இருந்து தயாரிக்கப்படும் பீர்தான் பிஸ்னர்.

பொதுவாக பார்லி சாகுபடியில், மாட்டுச்சாணம் அல்லது உரத்தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உரங்களே பயன்படுத்தப்படும். அதற்கு பதிலாக, தற்போது  மனித சிறுநீர் உரமாக பயன்படுத்தப்பட்டது.

இந்த பீரை தயாரிப்பதற்காக ஒரு இசை திருவிழாவில் இருந்து ஐம்பதாயிரம் லிட்டர் சிறுநீர் சேகரிக்கப்பட்டது. இந்த பீரை தயாரிக்கும்   நோர்ப்ரோ நிறுவனம், இதில் எந்தவித மனிதக் கழிவுகளும் இல்லை என்று உறுதியளிக்கிறது.

பீரில் இனி சிறப்பாக, நிலைத்திருக்கக்கூடிய வகையில் புதிதாக என்ன செய்யலாம் என்று யோசித்ததன் விளைவாக பிஸ்னர் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தி ''பீர் சைக்ளிங்'' என்று சொல்லப்படுகிறது.  'இந்த புது ரக பீரை சுவைத்தாள்,  அதில் சிறுநீரின் சுவை சிறிது கூட இருப்பதில்லை என்கின்றனர் பீர் பிரியர்கள். 

50 ஆயிரம் லிட்டர் சிறுநீர் பயன்படுத்தப்பட்டு விளைவிக்கப்பட்ட பார்லியில் இருந்து, அறுபதாயிரம் பாட்டில் பீர் வரை தயாரிக்க முடியும் என்கிறது அதை தயாரிக்கும் நிறுவனம்.

சிறுநீரை குடிநீராகவும், உரமாகவும் மாற்றும் இயந்திம் பெல்ஜியம் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் உலகம் முழுவதும் புழக்கத்திற்கு வரும்போது, அனைத்தும் கழிவு மயமாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வன்முறை நடப்பதாக பாகிஸ்தான் கதறல்.. வெளியுறவுத்துறை பதிலடி..!
வங்கதேசத்தின் தலையெழுத்தை மாற்றுவாரா இந்த 30 வயது 'மர்மப் பெண்'..? யார் இந்த ஜைமா ரஹ்மான்..?