"பாகிஸ்தானில் இந்தியர் யாதவ் உயிருக்கு அச்சுறுத்தல்" - சர்வதேச நீதிமன்றத்தை நாட இந்தியா முடிவு

First Published May 10, 2017, 4:04 PM IST
Highlights
indian wants help of international court


பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்புஷன் யாதவ் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது, சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார் எனக் கூறி சர்வதேச நீதிமன்றத்தை நாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தூக்கு தண்டனை

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகக் கூறி இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகுல்புஷன் யாதவ் அந்நாட்டு உளவுத்துறையால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரணை செய்த ராணுவ நீதிமன்றம் குல்புஷன் யாதவுக்கு தூக்கு தண்டனை விதித்தது.

ரத்து

இதை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்து. இதை ஏற்ற சர்வதேச நீதிமன்றம், குல்புஷன் யாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது.

இந்நிலையில், மீண்டும் சர்வதேச நீதிமன்றத்தை நாட இந்தியா முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய வௌியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கோபால் பாக்லே டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-

சட்டவிரோதம்

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் குல்புஷன் யாதவ் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. அவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

மீண்டும்

தூதரக ரீதியான உதவிகளை கேட்டு 16 முறை பாகிஸ்தானா தூதரகத்தை அனுகியும் அந்நாட்டு அரசு பதில் அளிக்கவில்லை. இது வியன்னா ஒப்பந்தத்தை மீறியதாகும். இதையடுத்து, தீவிர ஆலோசனைக்குபின், சர்வதேச நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு செய்துள்ளோம்.

குல்புஷன் யாதவின் தாயாரும் விசா கேட்டு பல முறை முயற்சித்தும் அவருக்குவிசா வழங்கவில்லை. இது தொடர்பாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு வௌியுறவு செயலாளர் சர்தாஜ் அஜீஸ்க்கு கடிதம் எழுதி இருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!