குல்பு‌ஷன் ஜாதவ் மரண தண்டனை நிறுத்தி வைப்பு… சர்வதேச நீதிமன்றம் அதிரடி…

Asianet News Tamil  
Published : May 10, 2017, 08:10 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
குல்பு‌ஷன் ஜாதவ் மரண தண்டனை நிறுத்தி வைப்பு… சர்வதேச நீதிமன்றம் அதிரடி…

சுருக்கம்

stay for gulbushan death sentence

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பு‌ஷன்  ஜாதவின் மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து சர்வதேச நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பு‌ஷன் ஜாதவ் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். ஜாதவ் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தாலும் பாகிஸ்தான் நீதிமன்றம்  அவருக்கு மரண தண்டனை விதித்தது. 


இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக தனது  குற்றத்தை குல்புஷன் ஒப்புக் கொண்டது போன்ற போலியான வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டது.

பாகிஸ்தானின் இநத் செயலுக்கு இந்தியா கடும்  கண்டனம் தெரிவித்திருந்ததது.

இந்நிலையில் இப்பிரச்சனையில் தலையிடுமாறு சர்வதேச நீதிமன்றத்துக்கு இந்திய வெளியுறவுத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்த குல்புஷன் ஜாதவின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த கடிதம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு  அனுப்பப்பட்டுள்ளது.  

மேலும் குல்புஷன் ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தற்காலிக தடை விதித்து இருப்பது குறித்து குல்புஷனின் தாயாரிடமும்  தெரிவிக்கப்பட்டுள்ளதாக  வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். 
  
 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வன்முறை நடப்பதாக பாகிஸ்தான் கதறல்.. வெளியுறவுத்துறை பதிலடி..!
வங்கதேசத்தின் தலையெழுத்தை மாற்றுவாரா இந்த 30 வயது 'மர்மப் பெண்'..? யார் இந்த ஜைமா ரஹ்மான்..?