பிரான்ஸ் அதிபரானார் இமானுவேல் மேக்ரோன் - வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை என சூளுரை

Asianet News Tamil  
Published : May 08, 2017, 07:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
பிரான்ஸ் அதிபரானார் இமானுவேல் மேக்ரோன் - வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை என சூளுரை

சுருக்கம்

macron elected prsesident of france

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வலது முன்னணி தேசிய கட்சித் தலைவர் இமானுவேல் மேக்ரோன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பிரான்ஸ் அதிபர் பிரான்சிஸ் ஹாலண்டேவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்டத் தேர்தலில் இமானுவேல் மேக்ரோனும், வலதுசாரி கட்சியைச் சேர்ந்த பெண் வேட்பாளர் லி பென்னும் வெற்றி பெற்றனர்.

இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில் வலது முன்னணி தேசிய கட்சித் தலைவர் இமானுவேல் மேக்ரோன் 65.1 சதவீத வாக்குகள் பெற்று நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் தோல்வியை ஏற்றுக் கொள்ளாத லி பென் மோசடி செய்து இமானுவேல் வெற்றி பெற்றிருப்பதாகவும், இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்களை நடத்த இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

(இமானுவேல் மற்றும் அவரது 65 வயது மனைவி)

39 வயதான மேக்ரோன் 65 வயது உடைய தனது பள்ளி ஆசிரியை மறுமணம் செய்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு வன்முறை நடப்பதாக பாகிஸ்தான் கதறல்.. வெளியுறவுத்துறை பதிலடி..!
வங்கதேசத்தின் தலையெழுத்தை மாற்றுவாரா இந்த 30 வயது 'மர்மப் பெண்'..? யார் இந்த ஜைமா ரஹ்மான்..?