விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்புத் தலை இருந்ததால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்புத் தலை இருந்ததால் பயணிகள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. துருக்கி நாட்டுக்கு சொந்தமான விமானத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
விமான பயணம் என்றாலே பலருக்கு குதுகலம் தான், விதவிதமான உணவு, குடிப்பதற்கு ரக ரகமான பானங்கள், விமானப் பணிப் பெண்களின் கனிவான கவனிப்பு என பயணம் மகிழ்ச்சியாகவே இருக்கும். ஆனால் துருக்கி விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பாம்புத் தலை இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- துருக்கி தலைநகர் அங்காராவில் இருந்து ஜெர்மனியின் டுசெல்டார்ப் பகுதிக்கு துருக்கி நாட்டின் சன் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் பயணிகளை ஏற்றிச் சென்றது.
அப்போது விமானத்தில் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது, அதில் ஒரு பயணிக்கு வழங்கபட்ட உணவில் பாம்பு தலையில் இருந்தது, அது உருளைக் கிழங்கு பீட்ரூட் போன்ற காய்களுக்கு நடுவில் இருந்துள்ளது. உணவில் பாம்பு தலையைக் கண்ட பயணி பயத்தில் அலறினார், அதைக் கண்ட சக பயணிகள் அவரிடம் விசாரித்தனர், அப்போது அவர் தனது உணவில் பாம்பு தலை இருப்பதை காட்டினார், உடனே அதிர்ச்சி அடைந்த சகபயணிகள் அவர்கள் காட்டில் இருந்த உணவுகளை உடனே கீழே கொட்டினார், சிலர் வாந்தி எடுத்தனர். பின்னர் உனவில் உள்ள பாம்பு தலையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர், தங்கள் உணவில் பாம்புத் தலை எப்படி வந்தது என ஆவேசமடைந்த அவர்கள் விமான ஊழியர்களிடம் புகார் அளித்தனர்.
இதையும் படியுங்கள்: இனி QR Code முறை.. இலங்கை எரிபொருள் ஒதுக்கீட்டில் அதிரடி மாற்றம் - அமைச்சர் அதிரடி உத்தரவு !
இது தொடர்பான புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. சிறிது நேரத்தில் இந்த விவாரம் பூதாகரமானது, இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த விமான நிறுவனம், எங்களது பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது, அவர்களுக்கு வழங்கப்படும் உணவில் நாங்கள் மிகவும் தரமாக வழங்கி வருகிறோம், உணவில் பாம்பு தலை இருந்தது எனக் கூறுவது ஏற்க முடியவில்லை, ஆனாலும் இது குறித்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேட்டரிங் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை விமானம் ரத்து செய்துள்ளதாகவும் வாமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் உணவில் பாம்பு தலை இருந்தது துரதிருஷ்டவசமானது என்றும், அதற்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளது.
30 ஆண்டுகளாக விமானம் நிறுவனம் இயங்கி வருகிறது, ஆனால் ஒரு முறை கூட இது போன்ற சம்பவம் நடந்தது கிடையாது,, பயணிகளுக்கு தரமான சேவையை வழங்குவதே எங்கள் லட்சியம் என தெரிவித்துள்ளது, இந்நிலையில் உணவு சப்ளை செய்த கேட்டரிங் நிறுவனம் தாங்கள் வழங்கிய உணவில் பாம்பு தலை இருந்து என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்: கோத்தபய ராஜபக்சே தப்பிக்க உதவிய தமிழர்...??? வெளியான பரபரப்பு தகவல்.
சமைக்கும் போது மிகவும் கவனமாக சமைக்கிறோம், நீங்கள் கூறுவதுபோல எந்த பொருட்களும் உணவில் சேர்க்கவில்லை, உணவுகள் 280 டிகிரி செல்சியஸில் சமைக்கப்படுகிறது என கூறியுள்ளது. இதேபோல சமீபகாலமாக டெல்லியில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் சிக்கன் சாலட்டில் பல்லி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதேபோல மற்றொரு கேன்டீனில் உணவில் சிகரெட் துண்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.