இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவி செய்யும் என்று அறிவித்து இருந்த நிலையில் இன்று 100 நாட்களைக் கடந்து அதிபர் அலுவலகம் திறக்கப்பட்டு இருக்கும் நிலையில், பிரதமரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர் கமிஷனர் கோபால் பாக்லே. தமிழ்நாடு சார்பில் வழங்கப்பட்டு இருக்கும் 3.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இலங்கைக்கான உதவிப் பொருட்ககளை இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து இன்று கோபால் பாக்லே வழங்கினார்.
undefined
இத்துடன் இலங்கை அதிபருக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து தெரிவித்து இருப்பதாக கோபால் பாக்லே தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பிரதமர் தனது வாழ்த்து மடலில், ''இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவி அளிக்கும். அந்த நாட்டின் பொருளாதாரம், ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க இந்திய பக்கபலமாக இருக்கும் என்று தெரிவித்து இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இரண்டு நாடுகளின் பழைய உறவை வலுப்படுத்துவது, இரண்டு நாட்டு மக்களின் பரஸ்பர நலன்களுக்கு பாடுபடுவது, நட்புறவுடன் இருப்பது ஆகியவை குறித்தும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..அதிமுகவில் அந்த 4 பேர்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் கொடுத்த அதிர்ச்சி !
இலங்கை பிரதமரின் சந்திப்பின்போது, இந்தியா சார்பிலும், இந்திய மக்களின் சார்பாகவும் கோபால் பாக்லே வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து அளித்து வரும் ஆதரவை தினேஷ் குணவர்த்தனா பாராட்டியதாக கோபால் குறிப்பிட்டுள்ளார். நடப்பாண்டில் மட்டும் இதுவரை இலங்கைக்கு இந்தியா 3.8 பில்லியன் டாலர் உதவிகளை வழங்கி இருப்பதாக கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்து உணவுப் பொருட்கள் கிடைக்காமல், மருந்து மற்றும் எரிபொருள் கிடைக்காமல் மிகவும் திண்டாடி வருகிறது. இந்த சூழலில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு இந்தியா இதுவரை 3.8 பில்லியன் டாலர் அளவிற்கு உதவி செய்துள்ளது. தற்போது இலங்கையின் பிரதமராக இருக்கும் தினேஷ் குணவர்த்தன ராஜபக்சே குடும்பத்தினருக்கு மிகவும் நெருங்கியவர். அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்ட மறுநாளே தினேஷ் குணவர்தனவை பிரதமராக ரணில் தேர்வு செய்து இருந்தார்.
தமிழ்நாட்டின் சார்பில் இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால் பவுடர், 100 மெட்ரிக் டன் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மூன்றாவது முறையாக எங்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் உதவிப் பொருட்களை அனுப்பி வைத்து இருக்கிறார். அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று இலங்கையைச் சேர்ந்த ஜீவன் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..அந்தரங்க உறுப்பில் காயம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் பொய் ? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !