‘செல்பி’ எடுத்து கின்னஸ் சாதனை படைத்த பாடகர்

Asianet News Tamil  
Published : Oct 28, 2016, 09:02 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
‘செல்பி’ எடுத்து கின்னஸ் சாதனை படைத்த பாடகர்

சுருக்கம்

அமெரிக்காவைச் சேர்ந்த பாப் பாடகரான டன்னி வால்பெர்க் 3 நிமிடத்தில் 122 செல்பி புகைப்படங்களை தனது ரசிகர்களுடன் எடுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் கடந்த ஆண்டு நிகழ்த்தப்பட்ட சாதனையில் 3 நிமிடத்தில் 119 செல்பி புகைப்படங்கள் மட்டுமே எடுக்கப்பட்டிருந்த நிலையில், அதை இந்த நிகழ்வு முறியடித்துள்ளது. இந்த சாதனையை சிங்கப்பூரைச் சேர்ந்த அருபா நிறுவனம் நிகழ்த்தியிருந்தது.

பாய்பேண்ட் நியூ கிட்ஸ் ஆன் தி பிளாக் எனும் அமைப்பை நடத்தி வருபவர் டன்னி வால்பெர்க். இவர் தனது ரசிகர்களுடன் சேர்ந்து 3 நிமிடத்தில் அதிகபட்சமான செல்பிகளை எடுத்து கின்னஸ் சாதனை படைக்க விரும்பினார்.

இதற்காக  போர்ட்  ஆப் நியூ ஓர்லான்ஸ் நகரில் இருந்து 3 ஆயிரம் ரசிகர்களுடன் , மெக்சிக்கோ நாட்டின் கோசுமல் தீவுக்கு புறப்பட்ட கப்பலில் இந்த சாதனை படைக்கப்பட்டது. அப்போது நடந்த இசை நிகழ்ச்சியின் போது, பாடகர் டன்னி வால்பெர்க் தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

கின்னஸ் சாதனை அதிகாரி சாரா கேசன் இந்த சாதனையை நேரில் பார்த்து பதிவு செய்தார். அப்போது 3 நிமிடங்களில் 122 செல்பிகள் எடுத்ததை அவர் உறுதி செய்துகொண்டு, பாடகர் வால்பெர்க்கு கின்னஸ் சான்றிதழை வழங்கினார்.

PREV
click me!

Recommended Stories

ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது.. 100 ராணுவ வீரர்கள் கதி என்ன? அதிர்ச்சி தகவல்!
5 நாட்கள் போர் ஒத்தி வைப்பு.. யூ-டர்ன் அடித்த டிரம்ப்..! ஈரானிடம் இறங்கி வரும் அமெரிக்கா..?