சிரியாவில் பள்ளி மீது விமானத் தாக்குதல்: 22 குழந்தைகள் பலி

Asianet News Tamil  
Published : Oct 28, 2016, 07:30 AM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
சிரியாவில் பள்ளி மீது விமானத் தாக்குதல்: 22 குழந்தைகள் பலி

சுருக்கம்

சிரியாவின் இத்லிப் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் 22 குழந்தைகள் உள்ளிட்ட 28 பேர் கொல்லப்பட்டனர் என ஐக்கிய நாடுகள் குழந்தைகள் அமைப்பானயுனிசெப் தெரிவித்துள்ளது.

சிரியாவில் அதிபர் அல் பஷார் அசாத்துக்கு ஆதரவாக, ரஷிய ராணுவம் இணைந்து, ஐ.எஸ். அமைப்புக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன.

கிளர்ச்சியாளர்கள் அதிகம் வசிக்கும் இத்லிப் மாநிலத்தில் உள்ள ஹாஸ் கிராமத்தில் நேற்ற முன்தினம் ரஷிய, சிரியா விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிகிறது. இந்த தாக்குதலில் பள்ளியில் இருந்த 22 குழந்தைகள் மற்றும் 6 ஆசிரியர்கள் உள்ளிட்ட 28 பேர் கொல்லப்பட்டனர் என கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கிறது.

வான் வழித்தாக்குதலில் பள்ளிக் குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஐ.நா.குழந்தைகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து யுனிசெப் அமைப்பின் இயக்குநர் அந்தோனி லேக் கூறுகையில், “ இது மிகவும் சோகமான சம்பவம்.  அட்டூழியமானது. இது அப்பட்டமான போர் குற்றமாகும். இந்த பள்ளிக்கூடத்தின் சுற்றுச்சுவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த தாக்குதல்தான் மிகவும் மோசமானதாகும். வெறுப்புணர்வை உருவாக்கும், இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை உலகம் எப்போது தடுத்து நிறுத்தப்போகிறது?'' எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து ரஷிய தூதர் விடாலி சுர்கின்னிடம் கேட்டபோது, அவர் கூறுகையில், “ இந்த தாக்குதல் மிகவும் கொடூரமானது. இதில் எங்கள் நாட்டு ராணுவம் ஈடுபடவில்லை. இதை மறுப்பது எனக்கு எளிதுதான். ஆனால், நான்பொறுப்புள்ள ஒரு மனிதன். எங்களுடைய பாதுகாப்பு அமைச்சகம் என்ன சொல்லப்போகிறது என்பதை பார்ப்பது அவசியம்'' எனத் தெரிவித்தார்.

மக்கள் வாழும் இடங்களில் மீது மேற்கத்திய நாடுகளின் படைகள்தான் தாக்குதல் நடத்துகின்றன என சிரியா அரசும், ரஷிய படைகளும் தெரிவிக்கின்றன. கடந்த 2011-ம் ஆண்டு சிரியா உள்நாட்டுப்போர் தொடங்கியதில் இருந்து 3 லட்சம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், நாட்டின் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

Shiva Seal: பாகிஸ்தானில் கிடைத்த 1700 வருட பழமையான சிவன் முத்திரை! ஸ்கந்த புராணத்துடன் தொடர்பு!
USA Travel Tips: அமெரிக்கா போறீங்களா? இந்தியர்களே இந்த 15 விஷயங்களை மறக்காதீங்க!