சிங்கப்பூர் நாட்டின் மக்கள்தொகை, கடந்த ஜூன் மாத நிலவரப்படி, 50 லட்சத்து 92 ஆயிரமாக உள்ளது
சிங்கப்பூர் நாட்டின் மக்கள்தொகை, கடந்த ஜூன் மாத நிலவரப்படி, 50 லட்சத்து 92 ஆயிரமாக உள்ளது
சி்ங்கப்பூர் நாட்டின் மக்கள் தொகை கடந்த ஆண்டிற்கு அதற்கு முந்திய ஓராண்டுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக, தேசிய மக்கள்தொகை திறனாளர் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், குடிமக்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டு ஜூன் 2023ல் - 30 லட்சத்து 61 ஆயிரம் பேர், கடந்த ஜூன் 2022ம் ஆண்டு கணக்கிடுகையில், மக்கள் தொகை 30 லட்சத்து 55 ஆயிரம் பேர் உள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.6 சதவீதம் பேர் அதிகரித்துள்ளனர்.
சிங்கப்பூர் நிரந்திரவாசிகளின் எண்ணிக்கை கணக்கிடுகையில், கடந்த ஜூன் 2023ல் - 54 லட்சம் பேர், ஜூன் 2022ல் - 52 லட்சம் பேர் நிரந்தரவாசிகளாக இருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.7% பேர் அதிகரித்துள்ளனர்.
கொரோன வைரஸ் பரவல் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், அதிகமான சிங்கப்பூர் நாட்டினரும், நிரந்திரவாசிகளும் சிங்கப்பூருக்கு திரும்பியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் விரைவில் இரு கட்டங்களாக உயரப்போகும் தண்ணீர் கட்டணம்! முழு விபரம் உள்ளே!
சிங்கப்பூர் நாட்டினர் அல்லாதோரின் எண்ணிக்கை மிக அதிகமாக 13.1 சதவீதம் அதிகரித்துள்ளது. சிங்கப்பூர்வாசிகள் அல்லாதோரின் எண்ணிக்கை இந்த ஜூன் 2023ல் - 10 லட்சத்து 77ஆயிரம் பேர் இருந்தனர். அதே கடந்த ஆண்டு ஜூன் 2022ல் - 10 லட்சத்து 56 ஆயிரம் பேர் இருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 13.1 சதவீதம் அதிகரித்துள்ளனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D