Singapore : சிங்கப்பூரில் வருகின்ற 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இரு வேறு கட்டங்களாக, தண்ணீர் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தவல்கள் வெளியாகியன. அதாவது ஒரு கன மீட்டர் தண்ணீர்க் கட்டணம் 50 சென்ட் வீதம் உயர உள்ளது. இது தற்போதுள்ள கட்டணத்தைவிட 18% அதிகமாகும். இதற்கிடையில் மேலும் இரு அத்யாவசிய விஷயங்களின் விலையும் உயரவுள்ளது.
சிங்கப்பூரில் தண்ணீர் கட்டணம் உயரப்போகிறது என்ற அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக, ரயில் மற்றும் பேருந்து கட்டணங்கள் உயரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அடுத்த செய்தியாக, 2023ம் ஆண்டின் கடைசி காலாண்டில் சிங்கப்பூரில் மின்சாரக் கட்டணம் சராசரியாக 3.7 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சராசரியாக ஒரு kWhக்கு 0.98 சென்ட் அதிகரிக்கிறது.
ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்கள் இடையேயான செலவினங்களுடன் ஒப்பிடும்போது, அதிக ஆற்றல் செலவுகள் ஏற்பட்டதே இதற்குக் காரணம் என்று SP குழுமம் இன்று செப்டம்பர் 29 அன்று ஒரு ஊடக வெளியீட்டில் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவுடன் நெருங்கிய உறவு: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதி!
இதன் விளைவாக, அக்டோபர் முதல் டிசம்பர் வரை, சிங்கப்பூரில் உள்ள குடும்பங்கள் ஜிஎஸ்டி பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, மின்சாரக் கட்டணத்திற்கு கிலோவாட்க்கு 27.74 முதல் 28.70 சென்ட் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம் என்றும் SP குழுமம் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது HDB நான்கு அறைகள் கொண்ட பிளாட்டில் வசிக்கும் ஒரு குடும்பம் சராசரியாக மாதாந்திர மின்சாரக் கட்டணத்தில் S$3.57 அதிகரிக்கும்.
எரிவாயு கட்டண உயர்வு
சிங்கப்பூரின் முன்னணி எரிவாயு சப்ளையர்களில் ஒன்றான சிட்டி எனர்ஜியும் எரிவாயு கட்டணத்தை அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31, 2023 வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இது ஜிஎஸ்டிக்கு முன், ஒரு kWhக்கு 21.91 சென்ட்களில் இருந்து தற்போது ஒரு kWhக்கு 22.42 சென்ட்களாக மாற்றியமைக்கப்படும்.
இது ஒரு kWh க்கு 0.51 சென்ட் அதிகமாகும். எரிபொருட்களின் விலை அதிகரிப்பே இந்த விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்ததாக சிட்டி எனர்ஜி தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட எரிவாயு கட்டணங்கள் EMA ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. 57க்கும் மேற்பட்டோர் பலி - மிலாடி நபி கொண்டாட்டத்தின் போது சோகம்!