சிங்கப்பூரில் கடந்த 14 செப்டம்பர் 2017ம் ஆண்டு முதல் சரியாக 6 ஆண்டுகள் சிங்கப்பூரின் அதிபராகவும், பாராளுமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்து வந்த 69 வயது பெண்மணியான ஹலீமா யாக்கோப் இன்று தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.
தர்மன் சண்முகரத்தினம்
இந்நிலையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், சுமார் 70க்கும் அதிகமாக சதவிகித வாக்குகள் பெற்று வெற்றியடைந்த தமிழக வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினம் இன்று செப்டம்பர் 14 2023 அன்று சிங்கப்பூரின் புதிய அதிபராக பதவியேற்றார். இவர் சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கப்பூர் வரலாற்றில் இதற்கு முன்னதாக 8 பேர் அந்நாட்டின் அதிபர்களாக பதவி வகித்துள்ள நிலையில், சுமார் 70 சதவிகித வாக்குகள் பெற்று வென்ற முதல் அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தர்மன் சண்முகரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சிங்கப்பூரின் அதிபர்கள் நேரடியாக பாராளுமன்றத்தால் நியமிக்கப்படுவார்கள், அல்லது போட்டியின்றி தேர்வு செய்யப்படும் நிலையே ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது தமிழர்
சிங்கப்பூரில் அதிபராக பதவி ஏற்கும் இரண்டாவது தமிழக வம்சாவளியை சேர்ந்த நபர் தர்மன் சண்முகரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஆர். நாதன்
அய்யா எஸ்.ஆர் நாதன் அவர்கள், சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதரக பணியாற்றியவர், மேலும் 1999ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை சுமார் 12 ஆண்டுகள் சிங்கப்பூரின் அதிபராக பதவி வகித்தார். சிங்கப்பூரின் அதிக ஆண்டுகள் அதிபராக பணியாற்றியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அய்யா எஸ்.ஆர்.நாதன் மரணித்தபோது, சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் அவருக்கு பிடித்த தஞ்சாவூரு மண்ணு எடுத்து என்ற பாடல் ஒளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.