சிங்கப்பூரில் ஐபோன் விற்பனையில் மோசடி செய்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிரை தண்டனை கிடைக்க வாய்ப்புகள் உண்டு.
சிங்கப்பூரில் கொலை கொள்ளை உள்ளிட்ட அனைத்து குற்ற நடவடிக்கைகளுக்கும் கடுமையான சட்டதிட்டங்கள் மூலம் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிங்கப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் மோசடி செய்தாக எழுந்த சந்தேகத்தின் பேரில் இருநாட்களுக்கு முன்பு போலீசர் கைது செய்துள்ளனர். கிம் மோ சாலையில் உள்ள புளோக் 200ல் இந்த மோசடிச் சம்பவம் நடந்ததாக சிங்கப்பூர் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவருக்கு 67 வயது என்றும், மலிவான விலையில் iPhoneகளை விற்பதாகக் கூறி ஒருவரிடம் 450 வெள்ளி (singapore dallor) வாங்கி அவரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
காவல்துறையினர் பொருத்திய கேமராக்களில் பதிவான படங்களின் மூலம் அடையாளம் காணப்பட அந்த நபர், அதேநாளில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மகிழ்ச்சியில் சிங்கப்பூர் Singles.. அட்டகாசமாக அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் - இனி அவங்க பாடு கொண்டாட்டம் தான்!
கைது செய்யப்பட்ட நபர் சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று (28 ஆகஸ்ட்) ஆஜர் படுத்தப்பட இருக்கிறார். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் அவருக்கு விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
சிங்கப்பூரில் மோசடிக் குற்றங்களை தடுக்க பல்வேறு முயற்சிகை எடுத்து வருவதாகக் கூறியுள்ள சிங்கப்பூர் காவல்துறை, மோசடி குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
கவனக்குறைவால் மாற்றி வழங்கப்பட்ட அஸ்தி! உயிரிழந்தவரின் குடும்பத்தினர் வருத்தம்!