கண் தொடர்பான நோய்களை கண்டறிய AI தொழில்நுட்பம்.. அசத்தும் சிங்கப்பூர் - அமைச்சர் பாலகிருஷ்ணன் பெருமிதம்!

By Ansgar R  |  First Published Sep 21, 2023, 4:16 PM IST

சிங்கப்பூரில் விழித்திரைப் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம், கண் தொடர்பான நோய்களைக் கணிக்க, சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்துவதை குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சரான விவியன் பாலகிருஷ்ணன் எடுத்துரைத்துள்ளார்.


எவ்வாறாயினும், AI மூலம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தைப் பற்றி பேசும் அதேநேரம், ​தற்போது உள்ள ஆய்வுகளின் முடிவுகளை கொண்டு முழுமையாக அதை நாம் பயன்படுத்த முடியாது என்றும் அவர் எச்சரிக்கை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விரைவில் AI தொழில்நுட்பதிலும் சிங்கப்பூர் சிறந்து விளங்கும் என்றார் அவர்.

AI - கற்றலில் சிங்கப்பூர் 

Tap to resize

Latest Videos

கடந்த செப்டம்பர் 17ம் தேதி துவங்கி நாளை மறுநாள் செப்டம்பர் 23ம் தேதி வரை நியூயார்க்கில் நடைபெறும் 78வது ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் விவியன் கலந்து கொள்கிறார் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே UNGAவில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி உரையாற்றிய அவர், செப்டம்பர் 19ல் நடந்த Earthshot Prize Innovation உச்சி மாநாட்டில், நிலைத்தன்மை குறித்தும் அவர் உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

“நாங்கள் தான் கொன்றோம்..” காலிஸ்தான் தீவிரவாதி சுக்தூல் சிங் கொலைக்கு பொறுப்பேற்ற கேங்ஸ்டர் அமைப்பு..

மேலும் அந்த மாநாட்டில் உடல்நலம், காலநிலை மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற முக்கியமான பகுதிகளில் AI எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பற்றி விவியன் பகிர்ந்து கொண்டார். சிங்கப்பூர் ஒரு சிறிய இடம் என்றாலும், அது தொடர்புடையதாக இருக்க AI ஐப் பயன்படுத்துகிறது என்று விவியன் கூறினார், ஆனால் அவர் இன்னும் கற்றல் நிலையில் உள்ளது என்பதையும் அவர் மேற்கோளிட்டார். 

எடுத்துக்காட்டாக, சிங்கப்பூர் AI ஐப் பயன்படுத்தி கண் நோய்கள், மீன் வளர்ப்பு, மற்றும் வெள்ளம் மற்றும் வானிலை முன்னறிவித்தல் போன்றவற்றை கண்டறிய முயற்சி செய்து வருவதாக தெரிவித்தார். சிங்கப்பூர் தாழ்வாகவும், கடலுக்கு அருகிலும் இருப்பதால் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் அனைத்து விதமான வானிலை பிரச்சனைகளை முன்னறிய AI உதவும் என்றும் அவர் கூறினார். .

கூடுதலாக, மக்கள் AI ஐ பாதுகாப்பாகவும், தனிப்பட்ட முறையில் மற்றும் நம்பிக்கையுடன் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துவது அவசியம் என்று விவியன் கூறினார்.

நிலவில் சூரிய வெளிச்சமே படாத தென் துருவப் பகுதியை படம் பிடித்த நாசா விண்கலம்!

click me!