இந்த பகுதி மனிதர்களால் ஒருபோதும் ஆராயப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் ஆய்வுக்கு மிகவும் ஆர்வமூட்டும் பகுதியாக உள்ள இப்பகுதியில் பனி படிவுகள் அல்லது பிற ஆவியாகும் பொருட்கள் உறைந்த நிலையில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, நமது பிரபஞ்சத்தின் பிரமிக்க வைக்கும் படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் விண்வெளி ஆர்வலர்களை மெய்சிலிர்க்க வைக்கும் படம் ஒன்றை செவ்வாய்க்கிழமை வெளியிட்டிருக்கிறது. இரண்டு வெவ்வேறு கேமராக்களால் பதிவு செய்யப்பட்ட படங்களைக் கொண்டு நாசா உருவாக்கியுள்ள இந்தப் படத்தில் நிலவின் தென் துருவப் பகுதியில் சூரிய ஒளியே படாத பகுதி நம் பார்வைக்கு வந்துள்ளது.
இந்தப் படம் சந்திரனின் தென் துருவப் பகுதி குறித்த இதுவரை தெரியாத விவரங்களை வெளிப்படுத்துகிறது என நாசா சொல்கிறது. ஷேக்லெட்டன் க்ரேட்டர் (Shackleton Crater) என்று அழைக்கப்படும் ஒரு அழகிய பள்ளத்தை இந்தப் படம் நமக்குக் காட்டுகிறது. 2025ஆம் ஆண்டில் நாசா விண்ணில் ஏவ இருக்கும் ஆர்ட்டெமிஸ் III விண்கலம் இந்த மொசைக் பரப்பில் தரையிறங்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரமடையும் இந்தியா - கனடா மோதல்: கனேடியர்களுக்கு விசா சேவை நிறுத்தியது இந்தியா
இந்த பகுதி மனிதர்களால் ஒருபோதும் ஆராயப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் ஆய்வுக்கு மிகவும் ஆர்வமூட்டும் பகுதியாக உள்ள இப்பகுதியில் பனி படிவுகள் அல்லது பிற ஆவியாகும் பொருட்கள் உறைந்த நிலையில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
''மூன்லைட் சொனாட்டா'' என்ற தலைப்புடன் நாசா இந்தப் படத்தைப் பகிர்ந்துள்ளது. இந்த புதிய படம் சந்திரனைச் சுற்றும் இரண்டு கேமராக்களின் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் உருவாக்கப்பட்டது. ஒன்று நாசாவின் எல்ஆர்ஓசி (LROC) சாட்டிலைட்டில் உள்ள கேமரா. மற்றொன்று, தென்கொரியாவின் விண்கலமான டானுரியில் பொருத்தப்பட்டுள்ள நாசா தயாரித்த ஷேடோ கேம் (ShadowCam). இந்த இரண்டு கேரமாக்கள் மூலம் மூலம் பெறப்பட்ட படங்களைக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
LROC கேரமாவில் நிலவின் மேற்பரப்பை பரந்த தோற்றத்தில் படம்பிடிக்க முடியும். ஆனால் சூரிய ஒளி படாத சந்திரனின் நிழல் பகுதிகளை புகைப்படம் எடுக்கும் திறன் குறைவு. ஆனால், ஷேடோ கேம் என்ற கேமரா LROC ஐ விட 200 மடங்கு அதிக ஒளி உணர்திறன் கொண்டது. மிக குறைந்த ஒளியிலும் சிறப்பான படங்களை எடுக்க முடியும். இதனால் LROC கேரமாவில் தெரியாத அம்சங்களையும் ஷேடோ கேம் படங்கள் காட்டிவிடும்.
ஷேக்லெட்டன் க்ரேட்டர் என்ற பள்ளத்தின் பகுதிகள் நிரந்தரமாக சூரிய ஒளி படாத பகுதிகளாக உள்ளன. இந்தப் படத்தில் ஷேடோகேமில் இருந்து எடுக்கப்பட்ட படத்தில் அவை மிகவும் துலக்கமாகத் தெரிகின்றன. மாறாக, சூரிய ஒளி படர்ந்த பகுதிகள் LROC ஆல் பதிவுசெய்யப்படவை.
கடந்த மாதம், இந்தியாவின் சந்திரயான்-3 பயணத்தில் விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய பின்பு பிரக்யான் ரோவர் நிலவில் இறங்கி ஆய்வுகளை மேற்கொண்டது. நிலவில் இரவு நேரம் தொடங்கியதை அடுத்து ரோவரும் லேண்டரும் உறக்க நிலைக்குச்ச சென்றன. இன்று முதல் நிலவில் பகல் நேரம் தொடங்குவதால், அவை மீண்டும் செயல்பட வாய்ப்பு உள்ளது. இஸ்ரோ அவற்றை மீண்டும் இயக்கத் தேவையான முயற்சியை மேற்கொண்டிருக்கிறது.
ஜி20 மாநாட்டின்போது பாதுகாப்பு ஏற்பாடுகளைப் புறக்கணித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ!