காருக்குள் இலவச WiFi.. இனி சிங்கப்பூரர்களுக்கு ஒரே ஜாலி தான் - சிறப்பு சலுகையை அதிரடியாக அறிவித்த Strides!

Ansgar R |  
Published : Dec 11, 2023, 12:29 PM IST
காருக்குள் இலவச WiFi.. இனி சிங்கப்பூரர்களுக்கு ஒரே ஜாலி தான் - சிறப்பு சலுகையை அதிரடியாக அறிவித்த Strides!

சுருக்கம்

Singapore Strides : கடந்த டிசம்பர் 9 முதல், சில ஸ்ட்ரைட்ஸ் பிரீமியர் டாக்ஸி பயணிகள் தங்கள் வாகனங்களின் இலவச வைஃபை சேவை மூலம் அதிக சலுகைகளை பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி SMRT ஸ்ட்ரைட்ஸ் டாக்ஸி மற்றும் பிரீமியர் டாக்சி என்ற இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து சிங்கப்பூரில் கடந்த மே 2023ல் ஸ்ட்ரைட்ஸ் பிரீமியர் (Strides Premier) என்ற புதிய நிறுவனத்தை துவங்கியது. இந்த இணைப்பால், இப்பொது அது சிங்கப்பூரின் இரண்டாவது பெரிய டாக்ஸி ஆபரேட்டராக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

அறிமுக சலுகை 

இந்நிலையில்  கடந்த டிசம்பர் 9 அன்று தனது புதிய லோகோ மற்றும் டாக்ஸி லிவரியை வெளியிட்டபோது, ​​ஸ்ட்ரைட்ஸ் பிரீமியர் அதன் குறிப்பிட்ட 50 டாக்சிகள் "வைஃபை வசதியுடன் இயக்கப்பட்டவை" என்று அறிவித்தது. இதனால் குறிப்பிட்ட சில டாக்சிகளில் பயணம் செய்யும் மக்கள் இலவச இணைய சேவைகளை பெற முடியும். 

பறவை காய்ச்சல் எதிரொலி.. சிங்கப்பூர் எடுத்த அதிரடி முடிவு - கோழி பிரியர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்!

ஸ்டிரைட்ஸ் பிரீமியர் பயணிகளுக்கு ஒரு நேரத்தில் 20 நிமிடங்களுக்கு வரம்பற்ற மற்றும் பாராட்டு இணைய அணுகல் கிடைக்கிறது, அதன் பிறகு பயனர்கள் மீண்டும் உள்நுழைய வேண்டும் என்று ஷின் மின் டெய்லி நியூஸ் தெரிவித்துள்ளது.

லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கும் ஜப்பானிய கடற்கரை! அணுக்கழிவைக் கொட்டியது காரணமா?

பைலட் திட்டம் ஆறு மாதங்களுக்கு நீடிக்கும்.

"சிங்கப்பூரில் தற்போது நெட்வொர்க் சேவைகளை வழங்கும் ஒரே டாக்ஸி இதுவாகும். பயணிகளிடம் நல்ல வரவேற்பைப் பெற்றால், இந்த சேவையை விரிவுபடுத்துவோம்" என்று Lianhe Zaobao விடம் CEO Ang Wei Neng கூறினார். தற்போதைக்கு இந்த இலவச WiFi சேவை சலுகையானது 6 மாதங்களுக்கு நடப்பில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
மகாத்மா காந்தியைப் பற்றி புகழ்ந்து எழுதிய புடின்! உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து சூசகம்?