Singapore Taxi Driver : சிங்கப்பூரில் பெண்களின் Upskirt வீடியோகளை எடுத்த நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
சிங்கப்பூர் நாட்டு ஊடகங்கள் அளித்த தகவலின்படி, மூன்று பெண் பயணிகள் மற்றும் 88 பெண்களின் Upskirt வீடியோக்களை எடுத்ததற்காக லோ ஜுன் சியான் என்ற 36 வயதான தனியார் வாடகை ஓட்டுனருக்கு நேற்று ஜனவரி 8ம் தேதி அன்று 12 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Upskrit வீடியோ என்றால் என்ன?
அப்ஸ்கர்ட் புகைப்படம் அல்லது வீடியோ என்பது ஒரு பெண்ணின் பாவாடை அல்லது குட்டை ஆடையின் கீழ் உள்ள இடங்களை புகைப்படங்கள் அல்லது வீடியோ எடுப்பதாகவும்.
2023 தான் பூமியின் மிக வெப்பமான ஆண்டு! 1.5 செல்சியஸ் வரம்பை நெருங்கும் புவி வெப்பம்!
என்ன நடந்தது?
கடந்த டிசம்பர் 2022 மற்றும் மே 2023க்கு இடையில், 33, 35 மற்றும் 41 வயதுடைய மூன்று பெண்கள் லோவின் தனியார் வாடகை வாகனத்தின் பின்புறத்தில் ஏறி அமர்ந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் அந்தரங்கப் பகுதிகளில் கேமராவை இயக்கி, அவர்களின் உள்ளாடைகள் மற்றும் பாதிக்கப்பட்ட இருவரின் முகங்களைப் படம்பிடிக்க தனது தொலைபேசியைப் பயன்படுத்தியுள்ளார் அவர்.
துணை அரசு வக்கீல் மேத்யூ சூ, லோவின் குற்றங்கள் சந்தர்ப்பவாதமானவை அல்ல என்றும், வேண்டுமென்றே அந்த பெண்களின் அந்தரங்க இடங்களை அவர் தனது செல் போனில் வீடியோ எடுத்ததாகவும் அவர் கூறினார். நவம்பர் 2022 மற்றும் பிப்ரவரி 2023 க்கு இடையில் மேலும் 88 பெண்களின் Upskirt வீடியோகளை அவர் எடுத்துள்ளார். விசாரணையின்போது லோ தனது "தனிப்பட்ட பாலியல் திருப்திக்காக" வீடியோக்களை எடுத்ததாக ஒப்புக்கொண்டார்.
ஜூலை 1, 2023 அன்று செங்காங் பஸ் இன்டர்சேஞ்சில் லோ கைது செய்யப்பட்டார். நீல நிற மேலாடை மற்றும் பெர்முடாஸ் அணிந்த ஒரு நபர் "சிறுமிகளைப் பின்தொடர்கிறார்" என்று கூறி ஒருவர் உதவிக்கு அழைத்த நிலையில் அவர் கைது செய்யப்பட, அதுவரை அவர் செய்த தவறான விஷயங்கள் எல்லாம் அம்பலமாகியுள்ளது.