2023 தான் பூமியின் மிக வெப்பமான ஆண்டு! 1.5 செல்சியஸ் வரம்பை நெருங்கும் புவி வெப்பம்!

By SG Balan  |  First Published Jan 9, 2024, 6:32 PM IST

2023 பதிவு செய்யப்பட்ட வெப்பமான ஆண்டாகும், பூமியின் மேற்பரப்பு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெப்பநிலையை விட 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரம்பை நெருங்கி உள்ளது.


புவி மேற்பரப்பில் சராசரி வெப்பநிலை 2023ஆம் ஆண்டில் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரம்பை நெருங்கி உள்ளது. இதனால் 2023ஆம் ஆண்டு பூமியின் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ளது.

இதுவரை பதிவு செய்யப்படட பூமியின் வெப்பநிலை வரலாற்றின்படி, மிகவும் வெப்பமான ஆண்டாக 2023ஆம் ஆண்டு இருந்துள்ளது. பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரி 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்ததை விட அதிகரித்துள்ளது என்று செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றிய காலநிலை கண்காணிப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

"தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தை விட, இந்த ஆண்டில்தான் முதல் முறையாக அனைத்து நாட்களிலும் ஒரு டிகிரி  அளவுக்கு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது" என்று கோபர்நிகஸ் காலநிலை மாற்ற சேவை துணைத் தலைவர் சமந்தா பர்கெஸ் கூறியுள்ளார்.

ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலில் 2,40,000 பிளாஸ்டிக் நுண்துகள்கள்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

2024 ஜனவரி மாதம் முதல் முறையாக இந்த 1.5 டிகிரி வரம்பைத் தாண்டி வெப்பநிலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் சமந்தா பர்கெஸ் கூறுகிறார். அடுத்த 20-30 ஆண்டுகளுக்காவது பூமியின் மேற்பரப்பு வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பிற்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று விஞ்ஞானிகள் பலமுறை கூறியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

"2023 இன் வெப்பநிலை குறைந்தது கடந்த 1,00,000 ஆண்டுகளில் எந்த காலகட்டத்திலும் இல்லாததைவிட அதிகமாக இருக்கலாம்" என்றும் சமந்தா பர்கெஸ் கூறியுள்ளார். இந்த வரம்புக்கு மேல் புவி வெப்பம் அதிகரிப்பது இப்போது வாழும் மக்களைப் பாதிக்காது. ஆனால் அவர்களின் குழந்தைகளையும் பேரக்குழந்தைகளையும் பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை மாற்ற உடன்படிக்கையில், வெப்பமயமாதலின் மிகக் கடுமையான விளைவுகளைத் தவிர்ப்பதற்காக புவி வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸ் வரம்புக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மத்திய பட்ஜெட் 2024 பிப்ரவரி 1ஆம் தேதி செய்யப்படுவது ஏன்?

click me!