உனக்கு நான் உதவுகிறேன்.. கைதியிடம் நேக்காக லஞ்சம் பெற்ற இந்திய வம்சாவளி வார்டன் - சிங்கப்பூர் கோர்ட் அதிரடி!

By Ansgar R  |  First Published Nov 21, 2023, 2:22 PM IST

Singapore News : சிங்கப்பூரில் பல யார் பதவிகளில் இந்திய மற்றும் தமிழக வம்சாவளியை சேர்ந்த பலர் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த சிறைக் கண்காணிப்பாளர் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.


நேற்று திங்கள் அன்று நடைபெற்ற விசாரணையில், அந்த மூத்த சிறை அதிகாரி, சிறைக் கைதியை தனது சிறைக் குழுவிலிருந்து மாற்றுவதற்கு SGD 1,33,000 (ரூ 83,02,930) லஞ்சம் கேட்டதற்காக அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் அவருக்கான தண்டனை அறிவிக்கப்படும். 

சிங்கப்பூரில் வசித்து வரும் அந்த 56 வயதான கோபி கிருஷ்ணா அயாவூ என்பவர், கைதிகளின் தகவல்களைப் பார்க்க சிறை அமைப்பை அணுகுமாறு தனது சக ஊழியர்களைத் தூண்டியதற்காகவும் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டதாக சேனல் நியூஸ் ஏசியா தெரிவித்துள்ளது. அவர் ஜனவரி மாதம் தண்டனைக்காக மீண்டும் நீதிமன்றத்திற்கு திரும்புவார்.

Tap to resize

Latest Videos

என்னது 22 கோடியா? ஏலம் விடப்பட்ட உலகின் காஸ்ட்லியான விஸ்கி - அதுல அப்படி என்னப்பா இருக்கு?

கோபி 10 குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார், அதில் பெரும்பாலானவை சோங் கெங் சை என்ற சிங்கப்பூர் கைதியிடம் இருந்து லஞ்சம் கோரிய குற்றச்சாட்டுகள் தான். செப்டம்பர் 2015 முதல் மார்ச் 2016 வரை சோங்கிடம் இருந்து கோபி லஞ்சம் கேட்டதாக அரசுத் தரப்பு வாதிட்டது. கார் கடன் தவணைகள், வீட்டைப் புதுப்பித்தல், பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் கிரெடிட் கார்டு பில்களுக்குச் செலுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் அந்த பணத்தை பெற்றுள்ளார். 

சோங் என்ற அந்த குற்றவாளி, 2005 ஆம் ஆண்டு ஏழு வயது சிறுவனை (காதலியின் மகன்) இறக்கும் வரை கொடுமை செய்த வழக்கில் 20 ஆண்டுகள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். அவர் சாங்கி சிறைச்சாலையின் A1 கிளஸ்டரில் அடைக்கப்பட்டார், இது குற்றவாளிகளுக்கான அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையாகும்.

2024 பட்ஜெட் வாக்கெடுப்பை சீர்குலைக்க முயற்சி: அல்பேனிய நாடாளுமன்றத்தில் தீ வைத்த எம்.பி.க்கள்!

கோபிக்கு பணம் கொடுப்பதற்கு ஈடாக A1 சிறையிலிருந்து, அந்த கைதியை இடமாற்றம் செய்ய உதவுவதாக கோபி உறுதியளித்ததாக சோங் சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் அவரை A1-லிருந்து மாற்றுவதற்கு கோபிக்கு தகுதியோ அதிகாரமோ இல்லை என்பது தனக்குத் தெரியும் என்று சோங் கூறினார். இருப்பினும், சோங்கிற்கு உதவக்கூடிய உளவுத்துறை அதிகாரியான ஒரு நண்பர் தனக்கு இருப்பதாக கோபி அந்த குற்றவாளியிடம் கூறியுள்ளார். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!