
குறிப்பாக இந்தியாவைத் தாண்டி பல வெளிநாடுகளில் அறிய வகை மதுபானங்கள் பெரிய அளவில் விற்பனையாகி வருகிறது. மது பிரியர்கள் மத்தியில் இது மிகப் பெரிய வரவேற்பையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற ஒரு மிகப்பெரிய மது விற்பனை ஏலத்தில், ஸ்காட்டிஷ் நாட்டை சேர்ந்த விஸ்கி பாட்டில் ஒன்று சுமார் 2.2 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்பனையாகி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது.
இந்திய மதிப்பில் இது சுமார் 22 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல மது விற்பனை நிரபனமான சோதேபி இந்த விற்பனையை செய்துள்ளது. உலக அளவில் பிரபலமான மற்றும் விலை உயர்ந்த மதுக்களை ஏலம் விடும் இந்த நிறுவனம் வெளியிடும் மதுக்களை வாங்குவதற்கு என்று உலகில் உள்ள பல பணக்காரர்கள் போட்டி போடுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஸ்கி பிரியர்கள் மத்தியில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தும் அளவில் அந்த நிறுவனம் ஒரு விஸ்கி பாட்டிலை ஏலத்தில் விட்டு அது சுமார் 22 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 22 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ள இந்த விஸ்கியின் பெயர் Macallan Adami 1926 என்பதாகும். கடந்த 1986 ஆம் ஆண்டில் இருந்து இப்பொழுது வரை வெறும் 40 பாட்டில்களே உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 60 வருடங்களுக்கு மேல் பழமையான இந்த விஸ்கி பாட்டிலில் உள்ள அந்த மது மிக மிக குறைவான அளவில் எடுத்துக் கொண்டாலே மிகப்பெரிய போதையை அதை உட்கொள்பவர்களுக்கு தரும் என்று கூறப்படுகிறது.