போலீஸ் அதிகாரி யுவராஜாவினுடைய இறப்பு குறித்து ஒரு மாபெரும் சர்ச்சை வெடித்துள்ளது.
சிங்கப்பூரில் பிரபலமான யிஷுன் குடியிருப்பு பகுதியில் நேற்று ஒரு 36 வயது நபர் இறந்து கிடந்தது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கு இறந்து கிடந்தவரை கண்டு அதிர்ந்து போயினர். காரணம் அந்த 36 வயது நபர் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி ஆவார்.
இறந்துகிடந்த போலீஸ் அதிகாரியின் பெயர் யுவராஜா என்பது குறிப்பிடத்தக்கது, இதனைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரி யுவராஜாவினுடைய இறப்பு குறித்து ஒரு மாபெரும் சர்ச்சை வெடித்துள்ளது. யுவராஜா இறப்பதற்கு முன்பு ஜூலை 21ம் தேதி மாலை 4.30 மணியளவில் தனது Facebook பக்கத்தில் ஒரு மிகப்பெரிய பதிவினை அவர் போட்டுள்ளார்.
ட்ரில்லர் வைத்து தலையில் சர்ஜரி.. தனக்கு தானே ஆபரேஷன் செய்துகொண்ட நபர் - இறுதியில் நடந்து என்ன?
அந்த பதிவில் தான் சுமார் 18 ஆண்டுகளாக காவல் பணியில் இருந்து வருவதாகவும், சார்ஜென்ட் பதவியில் தான் இருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தனது பணியிடத்தில் எவ்வாறு அவர் கொடுமைப்படுத்தப்பட்டார் என்றும் தான் எந்த வகையில் ஒதுக்கி வைக்கப்பட்டார் என்பதையும் விவரித்துள்ளார். தான், சிறுவயதிலிருந்தே சீருடை அணிந்த ஒரு காவல் அதிகாரியாக ஆசைப்பட்டதாகவும், 2005 முதல் 2007 வரை போலீசில் இணைந்து தனது தேசிய சேவையை செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தனது சகாக்கள் தன்னை எப்போதும் கேலி கிண்டல் செய்து வந்ததாக அவர் புகார் கூறியுள்ளார். அவரை தனது சகாக்கள் "கெலெங் கியா" (இந்திய நபரை இழிவுபடுத்தும் சொல்) என்று கூறி கிண்டல் அடித்துள்ளதாகவும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம், இந்த விவகாரத்தை முழுமையாக விசாரிக்குமாறு சிங்கப்பூர் காவல் படையை (SPF) கேட்டுக்கொண்டுள்ளார். அந்த போலீஸ் அதிகாரியின் மரணத்தில் இனபாகுபாடு தொடர்புள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.