சிங்கப்பூர் NTUC.. தேர்வு செய்யப்பட்ட புதிய தலைவர் - பதவியேற்கிறார் மூத்த சுகாதார சங்க தலைவர் கே. தனலெட்சுமி!

Ansgar R |  
Published : Nov 24, 2023, 12:40 PM IST
சிங்கப்பூர் NTUC.. தேர்வு செய்யப்பட்ட புதிய தலைவர் - பதவியேற்கிறார் மூத்த சுகாதார சங்க தலைவர் கே. தனலெட்சுமி!

சுருக்கம்

Singapore News : சிங்கப்பூரின் புதிய NTUC மத்தியக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மூத்த சுகாதாரப் பாதுகாப்பு சங்கத் தலைவர் கே. தனலெட்சுமி நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 23) தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (NTUC) தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழக வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரரான 57 வயதான திருமதி தனலெட்ச்சிமி, இரண்டு முறை அதிபராக பதவி வகித்த பிறகு மீண்டும் தேர்தலை நாடாத திருமதி மேரி லியூவிடமிருந்து அந்தப் பொறுப்பை ஏற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. NTUCக்கு ஒரு விதி உள்ளது, அதன் தலைவர்கள் 62 வயதை அடையும் போது இளைய வாரிசுகளுக்கு வழிவகுக்க வேண்டும் என்பது தான் அது.

1998 ஆம் ஆண்டு தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை ஊழியர் சங்கத்தின் (NUHEU) தலைவராக திருமதி. தனலெட்ச்சிமி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் NUHEU மற்றும் சுகாதார நிறுவனம் சிங்கப்பூர் ஊழியர் சங்கத்தின் இணைப்பிற்கு உந்து சக்தியாக இருந்தார் அவர் என்று NTUC ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கோவிட் விதிகளை கடுமையாக பின்பற்றியவர்களுக்கு மன ஆரோக்கியம் மோசமாக உள்ளதாம்.. ஏன் தெரியுமா?

திருமதி தனலெட்ச்சிமி 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் NTUCன் மத்திய குழுவிற்கு முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 2019ல் அதன் துணைத் தலைவர்களில் ஒருவரானார். 2016 முதல் 2018 வரை நியமன நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார் தனலெட்சுமி.

"இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாங்கள் எங்கள் தொழிலாளர்களின் ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளோம், மேலும் எங்கள் தொழிலாளர்களின் நலன்களை புதிய மத்திய குழுவுடன் தொடர்ந்து சேர்ப்பது, அவர்களின் ஊதியம், நலன் மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்ட முயற்சிகளில் பணியாற்றுவது ஜனாதிபதியாக எனது கடமையாகும்” என்று தேர்தலுக்குப் பிறகு திருமதி தனலெட்சிமி கூறினார்.

ஆஸ்திரேலிய கடற்கரையில் படையெடுக்கும் ஆயிரக்கணக்கான எலிகள்.. அச்சத்தில் மக்கள்..

மேலும் கடந்த 2015ம் ஆண்டு முதன்முதலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திருமதி லியூ, சக தொழிலாளர் இயக்கத் தலைவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார், அவர் தலைமையில் "செறிவூட்டுவதற்கும் நிறைவேற்றுவதற்கும் குறைவானது எதுவுமில்லை" என்று அவர் புகழாரம் சூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு பெரிய அதிர்ச்சி.. டிசம்பர் 15 முதல் புது ரூல்ஸ்.. H-1B விசா நேர்காணல்கள் ரத்து.!
மீண்டும் தாக்குதல் நடத்தினால் கடுமையான பதிலடி.. பாக். முப்படை தளபதி அசிம் முனீர் பம்மாத்து!