சிங்கப்பூரில் நடந்த ஒரு கொடூர கொலை சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது. சொந்த மகளை கொன்ற குற்றத்திற்காக, சிங்கப்பூரில் வசித்து வரும் ஒரு நபர் கைது செய்யப்பட்டு, அவருக்கு தக்க தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
இந்த வழக்கில் குற்றவாளியென தீர்ப்பிடப்பட்டுள்ள ஒரு நபரும், அவரது மனைவிக்கும் நான்கு குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் ஒருவர் தான் இறந்த அந்த 2.5 வயது பெண் குழந்தை, அந்த நபரின் மனைவிக்கு முந்தைய திருமணத்தில் பிறந்த ஒரு மகளும் ஒரு மகனும் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உமைஸ்யா என்று அழைக்கப்படும் அந்த பச்சிளம் குழந்தை, கடந்த நவம்பர் 2011ல் சுமார் மூன்று மாத குழந்தையாக இருந்தபோதே குழந்தை பராமரிப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பராமரிப்பு இல்லத்தில் தொடர்ச்சியாக 1.5 ஆண்டுகள் வளர்ந்த அந்த குழந்தை, கடந்த 2013 ஆம் ஆண்டு அவர்களது தாய் மற்றும் தந்தையிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் வெகு நாட்களாக தாய் மற்றும் தந்தை முகத்தை பார்க்காமலேயே வளர்ந்த அந்த குழந்தை அவர்களிடம் சென்றதும் சற்று அடம்பிடித்து உள்ளது.
பழிக்குப் பழி! கனடாவின் தூதரக அதிகாரி 5 நாட்களில் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு!
அந்த பிஞ்சு குழந்தை அழும்போதெல்லாம் அந்த தாய் மற்றும் தந்தை, அக்குழந்தையிடம் மிக கொடூரமாக நடந்து கொண்டுள்ளனர். அந்த குழந்தையை அடிப்பது போன்ற கொடூர செயலியை ஈடுபட்ட நிலையில் அந்த குழந்தைக்கு சுமார் 2.5 வயது இருக்கும் பொழுது, தான் அணிந்திருந்த டயப்பரில் மலம் கழித்துள்ளார். ஆனால் குழந்தை என்பதால் அதை பெரிது படுத்தாமல் தனது டயப்பரை கிழித்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார் அந்த குழந்தை.
இதை கண்டு முதலில் தாய் அந்த குழந்தையை தாக்க, அதன் பிறகு குற்றவாளியான அந்த இறந்த குழந்தையின் தந்தை, அந்த பிஞ்சு கன்னத்தில் மூன்று முறை கொடூரமாக அறைந்துள்ளார். இதில் அழுது புலம்பிய அந்த குழந்தை ஒரு கட்டத்தில் கீழே விழுந்து மூச்சு விட சிரமப்பட்டுள்ளது, எங்கே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றாள் நம்மை கைது செய்து விடுவார்களோ என்று எண்ணி குழந்தைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர்.
தக்க சமயத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால், குழந்தையை காப்பாற்றி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் குழந்தை இறந்துவிட அதை மறைப்பதற்காக ஒரு இரும்பு குடுவையில் வைத்து குழந்தையை கொடூரமாக எரித்துள்ளனர். அதன் பிறகு இதை யாருக்கும் தெரியாமல் அந்த குடுவையை தங்கள் வீட்டிலேயே சுமார் ஐந்து ஆண்டுகள் அந்த தம்பதியினர் மறைத்து வைத்துள்ளனர்.
இறுதியாக அந்த குழந்தையின் உறவினர் ஒருவருக்கு கடும் சந்தேகம் எழுந்த நிலையிலும், அந்த குழந்தை பள்ளிக்கு செல்ல வேண்டிய நேரம் வந்ததால், அரசிடமிருந்து பெற்றோர்களுக்கு வந்த அழைப்பை அடுத்தும் அவர்கள் செய்த அந்த கொடூர செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த குடுவையை எடுத்து பார்த்த பொழுது எரிக்கப்பட்ட உடலின் எஞ்சிய சில எலும்புகளும் பற்களும் மட்டுமே அதில் கிடந்துள்ளது. கொடூரமான இந்த செயலை செய்த அந்த தகப்பனுக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் 21.5 ஆண்டுகள் சிறை மற்றும் 18 முறை சவுக்கால் அடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருமிய இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறைத்தண்டனை: இதுதான் காரணம்!