கனடாவில் எந்தவொரு வன்முறைச் செயலிலும் இந்திய அரசாங்கத்தின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டுவது அபத்தமானது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணத்திற்கு இந்தியாவே காரணம் என்று கூறிய சில மணிநேரங்களிலேயே மூத்த இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றியுள்ளது.
திங்கட்கிழமை, காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கு பின்னணியில் ‘வெளிநாட்டு சக்திகள்’ இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். அவர் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் பங்கு இருப்பதாக அவர் கூறியதாக வெவ்வேறு செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
undefined
ஜஸ்டின் ட்ரூடோவின் இந்தக் கருத்து தூண்டிவிடப்பட்டது என்றும் அபத்தமானது என்றும் செவ்வாய்க்கிழமை வெளியுறவுத்துறை அமைச்சகம் பதில் கூறியுள்ளது.
67 லட்சம் போச்சு! கூகுள் ஊழியரின் உல்லாச வாழ்க்கையில் மண் அள்ளி போட்ட கிரிப்டோகரன்சி!
கனடா பிரதமரின் அறிக்கையை நிராகரிப்பதாகக் கூறியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், "கனடாவில் எந்தவொரு வன்முறைச் செயலிலும் இந்திய அரசாங்கத்தின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டுவது அபத்தமானது, தூண்டிவிடப்பட்டது ஆகும். இதேபோன்ற குற்றச்சாட்டுகளை கனடா பிரதமர் எங்கள் பிரதமரிடம் நேரிலும் முன்வைத்தார். அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன” என்று தெரிவித்துள்ளது.
ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் வெளியான சில மணிநேரங்களுக்குப் பிறகு கனடா ஒரு மூத்த இந்திய தூதர் ஒருவரையும் அந்நாட்டில் இருந்து வெளியேற்றியது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாகவே மூத்த இந்திய தூதரக அதிகாரியை வெளியேற்றியுள்ளதாக கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் 18ஆம் தேதி அன்று கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் உள்ள குருத்வாராவின் வாகன நிறுத்துமிடத்திற்கு வெளியே சுட்டுக்கொல்லப்பட்டார்.
காலிஸ்தான் தலைவர் கொலை : இந்தியாவை குற்றம்சாட்டி தூதரக அதிகாரியை வெளியேற்றிய கனடா..