சிங்கப்பூருக்கு லீ குவான் யூ ; இந்தியாவுக்கு நரேந்திர மோடி – பிரபல பத்திரிகையின் புகழாரம்

 
Published : Nov 13, 2016, 01:24 AM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
சிங்கப்பூருக்கு லீ குவான் யூ ; இந்தியாவுக்கு நரேந்திர மோடி – பிரபல பத்திரிகையின் புகழாரம்

சுருக்கம்

கருப்பு பண விவகாரத்தை கட்டுப்படுத்தியதால் சிங்கப்பூருக்கு லீ குவான் யூ – இந்தியாவுக்கு நரேந்திர மோடி என சிங்கப்பூரில் உள்ள பிரபல பத்திரிகையில் கட்டுரையாக புகழாரம் சூட்டியுள்ளனர்.

இந்தியா முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது என கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, அந்த பணத்தை வைத்திருந்த மக்கள், சில்லறையாக மாற்ற பல்வேறு கடைகளுக்கு படை எடுத்தனர்.

சிலர் பெட்ரோல் பங்க்குகளிலும், டாஸ்மாக் கடைகளிலும் மாற்றி கொண்டனர். ஆனாலும், அங்கேயே போதிய அளவுக்கு சில்லறை இல்லாததால், பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து நகைக்கடைகளுக்கு படையெடுக்க தொடங்கினர். இதையொட்டி நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதியது.

பின்னர், அறிவிக்கப்பட்ட பணம் செல்லாது தவிர அதன் மதிப்பு வரும் டிசம்பர் 30ம் தேதி வரை நீடிக்கும். அதற்குள் அனைத்து வங்கிகள், தபால் நிலையங்களில் மாற்றி கொள்ளலாம். மேலும் அரசு மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள், சுடுகாடு உள்ளிட்ட பொது நலன் சார்ந்த நிறுவனங்களில் பணத்தை மாற்றி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து கடந்த 2 நாட்களாக பொதுமக்கள் அதிகாலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்து, வங்கிகளில் பணத்தை பெற்று செல்கின்றனர். ஆனால் ஏடிஎம் மையங்களில் சரிவர பணம் பொருத்தவில்லை. இதனால், பொதுமக்கள் பலருக்கு ஏமாற்றம் மிஞ்சியது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கருப்பு பணம் மற்றும் பதுக்கல் பணத்தை ஒழிப்தற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை அனைத்து தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து சிங்கப்பூர் நாளிதழ் ஒன்றில், சிங்கப்பூரின் தந்தை என அழைக்கப்படும் லீ குவான் யூ போல, மோடி இந்தியாவில் பிறந்துள்ளார் என பாராட்டி கட்டுரை மூலம் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஏசப்பா அந்த புதின் நாச…..போயிடணும்..! கிறிஸ்துமஸ் தினத்தில் சிறப்பு பிரார்த்தனை செய்த ஜெலன்ஸ்கி
17 ஆண்டுக்குப் பின் நாடுதிரும்பிய தாரிக் ரஹ்மான்! வங்கதேச அரசியலில் பரபரப்பு!