Singapore Circuit Breaker : சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக பெருந்தொற்று வழக்குகள் அதிகரித்து வருவதாகவும். அதனால் ICUவில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிதப்பதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இதனையடுத்து Covid-19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை சமீபத்தில் அதிகரித்து வரும் நிலையில், சிங்கப்பூர் அரசாங்கம் சர்க்யூட் பிரேக்கரை (ஊரடங்கு கட்டுப்பாடு) மீண்டும் நிறுவ விரும்புவதாகக் கூறி, தவறான தகவல்கள் பரவி வருவதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் வெளியிட்ட அறிக்கையில் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.
நேற்று டிசம்பர் 11ம் தேதி அவர் வெளியிட்ட தனது Facebook பதிவில் இதனை தெரிவித்துள்ளார். துணைப் பிரதமர், ஏற்கனவே சில வணிகத் தயாரிப்புகளை ஆதரிப்பதில் பல போலியான விளம்பரங்கள் இணையத்தில் வளம்வருவதை சுட்டிக்காட்டி பேசினார். அதே போல சர்க்யூட் பிரேக்கரை மீண்டும் கொண்டுவர விரும்புவதாகக் கூறுவதும் பொய்யான தகவல் என்றார் அவர்.
"இவை அனைத்தும் பொய்கள்" என்று வோங் உறுதிப்படுத்தினார். "ஆன்லைனில் விழிப்புடனும் விவேகத்துடனும்" இருக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார். நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரை பதிவான கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கை 32,035 என மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய வாரத்தில் 22,094 என்ற அளவில் இருந்து அதிக அளவில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும், தொற்றுநோய் காலத்தின்போது காணப்பட்ட எண்ணிக்கையை விட இது அதிகமாக இல்லை என்று MOH உறுதியளித்தது. வழக்குகளின் அதிகரிப்புக்கு மக்கள்தொகையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருவதும், மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வதும் முக்கிய காரணங்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் சிங்கப்பூர் MOH (Ministry of Health) இந்த அலையின் பாதையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, நமது சுகாதாரத் திறனை சமாளிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது" என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.